விதிமீறல்.. தமிழக முதல்வருக்கான @CMOTamilNadu ட்விட்டர் பக்கம் திடீர் முடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சருக்கான பிரத்யேக ட்விட்டர் பக்கமான @CMOTamilNadu பக்கத்தை ட்விட்டர் விதிமீறலுக்காக முடக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில முதல்வர் பெயரிலும் தனியாக ட்விட்டர் பக்கத்தில் @CMO என்ற பெயருடன் கணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது. உதாரணமாக @CMOTamilNadu, @CMOkerala என தனித்தனியாக மாநில முதல்வர்கள் பெயரில் ட்விட்டரில் கணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது.

இதை முதல்வர்கள் அரசியலுக்காக பயன்படுத்துவதில்லை. அரசின் செயல்பாடுகளை பட்டியலிடுவதற்காக பயன்படுத்துகின்றனர். முதல்வராக அவர்களின் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழக முதல்வர் கணக்கு

தமிழக முதல்வர் கணக்கு

இதன்படி எந்த அரசியல் கட்சி தலைவர் முதல்வராக வந்தாலும் அவர்கள் பெயரில் ட்விட்டர் கணக்குகள் நிர்வகிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான பிரத்யேக ட்விட்டர் ஹேண்டிலை முன்னாள் முதல்வர் பழனிசாமி நிர்வகித்து வந்தார். அதில் 12 லட்சம் (1.2அ) பாலோயர்கள் இருந்தனர்.

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது பெயரிலும் தனி அக்கவுண்ட் வைத்துள்ளார். 260.1K பாலோயர்கள் பின்பற்றி வருகிறார்கள். இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது பெயரில் தனி ட்விட்டர் கணக்கு வைத்துள்ளார். இதை 2 மில்லியன் மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

திமுக வெற்றி

திமுக வெற்றி

நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்ற முக ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் என்று மாற்றி உள்ளார்.

எடப்பாடியார் மீது புகார்

எடப்பாடியார் மீது புகார்

இந்நிலையில் முன்னாள் முதல்வராக மாறிய எடப்பாடி பழனிசாமி நிர்வகித்து வந்த @CMOTamilNadu பக்கம் ட்விட்டர் விதிமீறலுக்காக முடக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் முதல்வருக்கு வழங்கப்பட்ட டுவிட்டர் கணக்கை தனது பெயரில் மாற்றி பயன்படுத்த முற்பட்டதால் முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எனினும் ட்விட்டர் நிறுவனம் என்ன காரணத்திற்காக முடக்கியது என்பதை தெரிவித்தால் மட்டுமே உண்மையை உறுதி செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+