ஏசிக்குள் வந்த புசு புசு சத்தம் சத்தம்.. அலறிய ரஞ்சித் குமார், வெலவெலத்த பூந்தமல்லி
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே செல்போன் கடையின் ஏ.சி இயந்திற்குள் வந்த புசு புசு சத்ததால் உள்ளே என்ன இருக்கிறது பார்த்த போது அதில் 6 அடி நீள நல்ல பாம்பு இருப்பதை கண்டு கடையின் ஓனர் ரஞ்சித் குமார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் பத்திரமாக நல்ல பாம்பை மீட்டனர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் எம்.ஆர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காலை கடைக்கு வந்த போது பொருத்தப்பட்டிருக்கும் ஏ.சி இயந்திரதிற்குள் சத்தம் வருவதை கண்டு உள்ளே பார்த்தபோது அதனுள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விரைந்து வந்த வனத்துறையினர் ஏ.சி இயந்திரத்தை கழட்டி உள்ளே பார்த்தபோது சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு இருந்தது.
அதனை லாவகமாக பிடித்த வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.செல்போன் கடையின் ஏ.சி இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.