சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை, பெங்களூருக்கு போட்டியாக கோவை.. நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 5ஆம் இடம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளது.

நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) ஒவ்வொரு ஆண்டும் பட்டியலை வெளியிடும்.

 நீங்க நீலகிரிக்கு போங்க! நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 3 அமைச்சர்களை களமிறக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நீங்க நீலகிரிக்கு போங்க! நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 3 அமைச்சர்களை களமிறக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 பட்டியல்

பட்டியல்

கற்பித்தல், கற்றல் முறை, ஆராய்ச்சி, தொழில்முறை, மாணவர்களின் திறன், தேர்ச்சி விகிதம் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை நேற்றைய தினம் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

 சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி


மருத்துவம், என்ஜினீயரிங் என பல்வேறு பிரிவுகளில் பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிகளுக்கும் தனித்தனியாக இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஒட்டுமொத்த பிரிவு மற்றும் என்ஜினீயரிங் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்து உள்ளது.

 நகரங்கள்

நகரங்கள்

சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைக் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் 83 கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளது. அதைத் தொடர்ந்து 69 கல்வி நிறுவனங்களுடன் சென்னை இரண்டாம் இடத்திலும், 40 கல்வி நிறுவனங்களுடன் பெங்களூர் 3ஆம் இடத்திலும் உள்ளன. மும்பை 39 கல்வி நிறுவனங்களுடன் 4ஆம் இடத்தில் உள்ளது.

கோவை

கோவை

இந்தப் பட்டியலில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கோவை 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. கோவையைச் சேர்ந்த 32 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. அதிகபட்சமாக இன்ஜினியரிங் பிரிவில் 9 கல்வி நிறுவனங்களும் கல்லூரி பிரிவில் 8 கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. கட்டிடக்கலை மற்றும் சட்டம் பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் கோவை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.

 திருப்பூரில் இல்லை

திருப்பூரில் இல்லை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை, கோவை, உள்ளிட்ட 25 நகரங்களில் இருந்து மொத்தம் 163 கல்வி நிறுவனங்கள் டாப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை நகரங்கள் டாப் 5 இடங்களில் உள்ளன. பெரிய நகரங்கள் வரிசையில் திருப்பூரில் இருந்து எந்தவொரு நகரமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

English summary
32 institutes from Coimbatore in National Institutional Ranking ranking: (சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியல் கோவை) National Institutional Ranking ranking latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X