Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்றதாக அரசு உதவி பெறும் பள்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமையாசிரியை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் என போலீசுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 18 ம் தேதி தமிழகம் வந்தார். கோவையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார்.

Coimbatore PM Modi Road Show High Court judge Anand Venkatesh advised the police not to take strict action against the school

கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கிய பிரதமர் மோடியின் ஊர்வலம் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரங்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. இத்தகைய சூழலில் இந்த சம்பவம் விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து கோவை லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்திகுமார் பாடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்றது சாய்பாபா காலனியை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா விசாரித்தார். அதன்பிறகு பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் பள்ளி நிர்வாகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளியின் தலைமையாசிரியை புகழ் வடிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‛‛பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்றதாக கூறுவது தவறானது. பிரசாரத்துக்கு மாணவர்களை பயன்படுத்தியதாக கூறப்படும் புகாரும் உண்மைக்கு புறம்பானது. பள்ளி நிர்வாகம் மீது தவறான நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.

உங்களுக்கு தகரடப்பா தூக்க அப்பா இருந்தார்! ஆனால் எனக்கு.. அண்ணாமலைக்கு கோவை அதிமுக வேட்பாளர் பதிலடி

இந்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது வழக்கு தொடர்பாக கோவை போலீசார் ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை பள்ளி நிர்வாகம் மீது போலீசார் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’’ என உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+