வந்தே பாரத் ரயில்.. சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்பீடில்.. கோவைக்கு போன 2வது குட்நியூஸ்.. ஆஹா செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை வரை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவைக்கு தற்போது இன்னொரு நல்ல செய்தி வந்துள்ளது.

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும். இந்த ரயிலுக்கு பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பு கிடைத்து உள்ளது. ஏற்கனவே சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

Coimbatore reportedly to get another Vande Bharat Train from Bangalore as Chennai route became hit

மக்கள் அதிக அளவில் இதில் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது.

சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

ஆனால் தற்போது இதன் சராசரி வேகம் 90 கிமீ என்ற அளவில்தான் உள்ளது. வந்தே பாரத் ரயில் 90 கிமீ வேகத்தில்தான் செல்கிறது. 495 km தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கடக்கிறது. இது அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 130 கிமீ தூரத்தை கூட தொட்டாலும் அதே வேகத்தில் செல்வது இல்லை. சராசரி வேகம் என்னவோ 90 கிமீ / 1 மணி நேரம்தான்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோவைக்கு தற்போது இன்னொரு நல்ல செய்தி வந்துள்ளது.

அதன்படி கோவைக்கு இரண்டாவது வந்தே பாரத் சேவை தொடங்கப்பட உள்ளது. கோவை - பெங்களூருக்கு இந்த சேவை அளிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளன.

Coimbatore reportedly to get another Vande Bharat Train from Bangalore as Chennai route became hit

கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கே இப்போது இந்த திட்டத்தை அறிவிக்க முடியாது. இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும் முடிந்ததும் பெங்களூர் - கோவை வந்தே பாரத் ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதோடு பெங்களூர் - கசிக்குடா வந்தே பாரத் சேவை தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+