கோயம்புத்தூரில் வலையில் வந்த மீன்.. டக்னு கம்மியான மீன்கள் விலை.. சென்னை காசிமேட்டில் ஒரே மகிழ்ச்சி
சென்னை: மீன் வரத்து அதிகரித்ததன் காரணமாக, பல வகையான மீன்கள் குவிந்துள்ளன.. இதனால் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்க, மீன் பிரியர்கள், மீன் மார்க்கெட்டுகளில் குவிந்தனர்.. அந்தவகையில், சென்னை, கோவை மாவட்டங்களில் விற்கப்படும் மீன்களின் விலையால் வியாபாரிகளும், பொதுமக்களும், மீன் பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலத்தில், இதுவரை சிறு படகுகள் வாயிலாக பிடித்து வரப்பட்ட மீன் வகைகள் மட்டுமே விற்கப்பட்டு வந்தன..

எனவே, தடைக்காலம் முழுவதுமே மீன்கள் விலை கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்புதான், அதாவது 14ம் தேதிதான், மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்..
வியாபாரிகள் ஏமாற்றம்
இதனால், கடந்த 15ம் தேதி ஞாயிறன்றுகூட, விடிகாலையில் இருந்தே பொதுமக்கள், மீன் பிரியர்கள், வியாபாரிகள் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் குவிந்திருந்தனர்.
ஆனால், வழக்கம்போல் பெரிய அளவில் மீன்கள் வரத்து இல்லை என்பதால் மீன்களின் விலை இரண்டு மடங்கு எகிறியது.. சங்கரா ஒரு கிலோ ரூ.650, கொடுவா ரூ.500, நண்டு ரூ.550, இறால் ரூ.600, கடமா ரூ.450 ரூபாய் சிறிய வகை வஞ்சரம் ரூ.1100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
ஆழ்கடல் மீன்கள்
ஆழ்கடலில் 15 நாட்கள் தங்கி மீன்பிடிக்க மீனவர்கள் சென்றிருந்ததால், பெரிய மீன்களை, இன்னும் ஒரு வாரத்தில் வலையில் பிடித்து வருவார்கள் என்றும், அப்போது மீன்கள் விலை குறைந்து விற்பனை செய்யப்படும் என்றும் நம்பப்பட்டது. எனவே, நேற்று அதாவது 22ம் தேதி, மீன்பிரியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவருமே பெரிய மீன்களை, குறைந்த விலையில் வாங்க தயாரானார்கள்.
எதிர்பார்த்தபடியே, நேற்று காசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டமும் காலையிலிருந்தே அலை மோதியது. அதிக அளவில் பெரிய மீன்கள் வந்திருந்ததால், அவற்றின் விலையும் குறைந்திருந்தது.
மீன்கள் விலை நிலவரம்
வஞ்சிரம் கிலோ ரூ.800, ஷீலா ரூ.450, சங்கரா ரூ.300, இறால் ரூ.300, நெத்திலி ரூ.150 என விலை குறைந்திருந்தது, மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. அதுபோலவே கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிலும், வஞ்சரம் ரூ.700-க்கு விற்கப்பட்டது.
இதுவரை வஞ்சிரம் ரூ.1,300 என விற்பனை ஆகிவந்த நிலையில், ரூ.700க்கு விற்கப்பட்டது. பாறை மீன்கள், 600 ரூபாயிலிருந்து 320க்கு இறங்கியது.. மத்தி மீன் 400 ரூபாயிலிருந்து 200-க்கும், நெத்திலி மீன் 420 ரூபாயிலிருந்து 250 ரூபாய்க்கும், செம்மீன் 650 ரூபாயிலிருந்து 400 ஆகவும் விற்கப்பட்டது.
அதேபோல, வாவல் 900 -ல் இருந்து 620 ஆகவும், அயிலை 450-ல் இருந்து 250 ஆகவும், கெளுத்தி 550 ரூபாயிலிருந்து 320 ரூபாயாகவும், சங்கரா 400-ல் இருந்து 260 ரூபாயாகவும், கொடுவா 850-ல் இருந்து 550, நண்டு ரூ.680-ல் இருந்து 430 ஆகவும் குறைந்து விற்பனை செய்யப்பட்டன.
வெள்ளை வாவல்
கடந்த வாரம் ஈரோடு உள்ளிட்ட மீன் மார்க்கெட்களிலும் மீன்கள் விலை அதிகமாகவே காணப்பட்டது.. கேரளாவிலிருந்து கடல் மீன், 9 டன் ஈரோடு மார்க்கெட்டிற்கு வந்திருந்தது.. இதில், அதிகபட்சமாக வெள்ளை வவ்வால் கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. தற்போது 600 ரூபாய்க்கு பாதியாக குறைந்துள்ளது, மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
தற்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் துவங்கி உள்ளதால், குறைந்த விலையில், மீன்பிரியர்கள் மீன்களை வாங்க குவிந்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications