சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவனை.. உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மே மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவர் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன குழுவான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
ஆர் மகாதேவன் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக இவர் பதிவு செய்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் வாதாடியுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் ஆயிரக்கணக்கான வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
-
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications