கொளத்தூர் தொகுதிக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் முதல்வர் ஆனதற்கு கொளத்தூர் தொகுதி மக்கள் அளித்த மிகப்பெரிய வெற்றிதான் காரணம் என்றும் ஹாட்ரிக் அடிக்கக் கூடிய வகையில் 3 முறை என்னை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Coming to Kolathur constituency feels like coming home - Tamil Nadu Chief Minister Stalin

அந்த வகையில், சென்னை அண்ணா நகர் மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் வகையில் ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை திறந்து வைத்த பிறகு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசும் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய வகையில் அனைவருக்குமான முதல்வர் என்ற பொறுப்பில் நான் இருந்தாலும் அந்த பொறுப்புக்கு வருவதற்கு காரணமாக இருந்ததது கொளத்தூர் தொகுதி மக்கள் அளித்த மகத்தான வெற்றிதான்.

ஒரு முறை அல்ல.. இரண்டு முறை அல்ல.. ஹாட்ரிக் அடிக்கக் கூடிய வகையில் மூன்று முறை.. மூன்று முறையும் தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்தவர்கள் நீங்கள்தான். அதில் இரண்டு முறை எதிர்க்கட்சி வரிசையில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன். என் மீது நீங்கள் நம்பிக்கையின் காரணமாக மீண்டும் 3-வது முறையாக வெற்றியை கொடுத்து முதல்வராக பணியாற்றும் வாய்ப்பையும் உருவாக்கி தந்து இருக்கிறீர்கள்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிறகு பல மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். நான் சென்னை மேயராக இருந்த போது ஒரு ஆண்டில் கட்டப்பட வேண்டிய பாலத்தை 9 மாதங்களில் கட்டி முடித்தேன். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் புதிய மேம்பாலம் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.

Coming to Kolathur constituency feels like coming home - Tamil Nadu Chief Minister Stalin

நான் முதல்வர் ஆனதற்கு கொளத்தூர் தொகுதி மக்கள் அளித்த மிகப்பெரிய வெற்றிதான் முக்கிய காரணம். என்னை 3 முறை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள். கொளத்தூர் தொகுதிக்கு வருவதை கடமைகளை செய்துவிட்டு, சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன். மிசா காலத்தில் என்னுடன் சிறையில் இருந்து என் மீது விழ வேண்டிய அடிகளை வாங்கியவர் சிட்டி பாபு.. இந்த மேடையில் நான் நின்று பேச காரணமாக அமைந்தவர் அண்ணன் சிட்டிபாபு தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+