சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ஆர்டர் கொடுத்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆண்டு தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் அதிமுக, பாஜக கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 இனி கபடி கபடி இல்லை!மோடி கபடிதான்! பட்டுனு சொன்ன சீனிவாசன்! டக்குனு திரும்பி பார்த்த அண்ணாமலை! கலகல இனி கபடி கபடி இல்லை!மோடி கபடிதான்! பட்டுனு சொன்ன சீனிவாசன்! டக்குனு திரும்பி பார்த்த அண்ணாமலை! கலகல

 அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை குற்றச்சாட்டு

அதேபோல் தரமற்ற பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தரமில்லாத பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 அண்ணாமலை ட்வீட்

அண்ணாமலை ட்வீட்

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் ஆர்டர்

மீண்டும் ஆர்டர்

பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

பல கோடி ஊழல்?

பல கோடி ஊழல்?

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல என்று விமர்சித்துள்ளார்.

English summary
Tamil Nadu BJP leader Annamalai has alleged that the companies that supplied substandard Pongal gift items last year have been ordered to supply the items again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X