கொரோனா முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தால் இழப்பீடு, அரசு வேலை - அரசுக்கு ஹைகோர்ட் யோசனை
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் முன்களப்பணியாளர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது என்றும், இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது.
மேலும் இது கொள்கை முடிவு என்பதால், அரசு தான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
இதேபோல, கொரோனா ஊரடங்கின் போது நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடக் கோரி ஜலாலுதீன் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications