Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜிபி முத்து, ரவுடி பேபி".. மொத்தமாக 8 பேருக்கு எதிராக சிஎம் செல்லுக்கே பறந்த புகார்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினின் தனி பிரிவிற்கு புகார் சென்றுள்ளது.

Recommended Video

    GP Muthu,Rowdy Baby Surya உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக CM Cell-ல் புகார் | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் டிக்டாக் மூலம் பேமஸ் ஆனவர்கள் பலர் உள்ளனர். பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வைரல் ஆனவர்களும், cringe வீடியோக்களை வெளியிட்டு டிரெண்ட் ஆனவர்களுக்கு இருக்கிறார்கள்.

    டிக்டாக் தடை செய்யப்பட்டுவிட்டாலும் தற்போதும் இவர்கள் தொடர்ந்து பேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட தளங்களில் வீடியோ வெளியிட்டு வைரலாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா போன்றவர்கள் மிக பிரபலம்.

    எப்படி

    எப்படி

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் என்று சொல்ல கூடிய அளவிற்கு இவர்கள் வித்தியாசமான வீடியாக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆபாசமும், அசிங்கமும் கலந்து இந்த வீடியோக்கள் இருப்பதாக இணையத்தில் சமீப நாட்களாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஜிபி முத்து தனக்கு வரும் லெட்டர்களை, பார்சல்களை படிக்கும் வீடியோக்கள் சிரிப்பை வர வைக்க கூடியதாக இருந்தாலும் சிலர் இது போன்ற வீடியோக்களையும் எதிர்த்து வருகிறார்கள்.

    சிரிப்பு

    சிரிப்பு

    முக்கியமாக ரவுடி பேபி சூர்யா தனது யூ டியூப், பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றுகிறார், வியூஸ் வாங்க வேண்டும் என்று மோசமான வீடியோக்களை பதிவேற்றுகிறார். திவ்யாவோ தனது ஜாதி பெருமையை பேசுவதையும், ஆபாசமாக பேசுவதையும் வழக்கமாக வைத்து இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

    புகார்

    புகார்

    இதில் ஜிபி முத்து போன்றவர்கள் கொரோனா விழிப்புணர்வு உட்பட சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து வந்தாலும் அவரையும் சேர்த்து மொத்தம் 8 பேருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோ வெளியிடும் இணைய பிரபலங்களின் பக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    மக்கள் அதிகாரம்

    மக்கள் அதிகாரம்

    இவரை தொடர்ந்து மக்கள் அதிகார இயக்கம் அமைப்பினர் நேரடியாக முதல்வரின் தனிப்பட்ட புகார் பிரிவிற்கு இவர்களின் பக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர். 8 பேரின் பக்கங்களை இதில் இணைத்து, புகார் அனுப்பி உள்ளனர். ஆபாசமாக பேசுவதாகவும், இணையத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன்

    ஆன்லைன்

    அதேபோல் ஆன்லைனில் படிக்க வரும் மாணவர்கள் இது போன்ற வீடியோக்களை பார்த்து கெட்டு போக வாய்ப்பு உள்ளது என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக தொடங்கப்பட்ட வழக்கில் ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை முடக்கும்படி திருப்பூர் கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    சிக்கல்

    சிக்கல்

    காவல்துறை இவரின் யூடியூப் சேனலை முடக்க உள்ளது. முன்னதாக யூடியூபில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து யூடியூபில் தவறாக பேசும் பலரை கைது செய்ய வேண்டும், பக்கத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+