சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்றிலிருந்து அடுத்த 12 நாட்கள்.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்-டவுன்.. எதற்கெல்லாம் தடை?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் என்ன மாதிரியான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும், எதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Chennai Lockdown கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?..அதிரடி Plan

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் லாக்டவுன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் அமலானது-- கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் அமலானது-- கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை

    எங்கு லாக்டவுன்

    எங்கு லாக்டவுன்

    சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்றுமுதல் இந்த லாக்டவுன் அமலுக்கு வருகிறது.

    அத்தியாவசிய தேவை

    அத்தியாவசிய தேவை

    இன்று முதல் அமலுக்கு வரும் இந்த லாக் டவுன் மூலம் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. முன்பு போல இல்லாமல் இந்த முறை கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். மக்கள் வெளியே செல்வதில் சென்னையில் கட்டுப்பாடுகள் மிக கடுமையாக இருக்கும். அதேபோல் மக்கள் இந்த முறை தேவை இல்லாமல் வெளியே சென்றால் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸ் அறிவித்து உள்ளது.

    சேவைகள்

    சேவைகள்

    • சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் லாக்டவுன் இருந்தாலும் பின்வரும் சேவைகள் எப்போதும் போல செயல்படும்.
    • அத்தியாவசிய பொருட்கள், காய்கறி கடைகள் எப்போதும் போல செயல்படும்.
    • ஆனால் இந்த கடைகள் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கும்
    • பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள் செயல்படும்.
    • விமானம் நிலையம் எப்போதும் போல இயங்கும்.
    • அம்மா உணவகங்கள் எப்போதும் போல செயல்படும்.
    • உணவகங்களில் பார்சல் சேவைகள் அனுமதிக்கப்படும்.
    • பணியிடத்தில் தங்கி பணியாற்றும் கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
    • நிறுவனங்களில் தங்கி பணியாற்ற வசதி இருந்தால் நிறுவனங்கள் செயல்படும்.
    • ஆம்புலன்ஸ் சேவைகள் செயல்படும்.
    • மின்னணு, அச்சு ஊடகங்கள் செயல்படும்.
    • அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் தொடர்ந்து இயங்கும்.
    செயல்படாத விஷயங்கள்

    செயல்படாத விஷயங்கள்

    • சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படாது.
    • இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது.
    • இ பாஸ் இல்லாமல் வெளியே செல்ல முடியாது - பழைய இ பாஸ் செல்லாது
    • சென்னையை விட்டு வெளியே செல்ல முடியாது
    • அவசர தேவை தவிர மற்ற விஷயங்களுக்கு கார், டாக்சி, ஆட்டோ செயல்படாது
    • திருமண நிகழ்ச்சிகள், மத கூட்டங்களில் அதிக பேர் கூட தடை
    • ரயில், மெட்ரோ இயங்காது
    • பேருந்துகள் இயங்காது
    • டாஸ்மாக் கடைகள் செயல்படாது
    • ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட முடியாது .
    • 2 கிமீ தூரத்திற்கு மேல் வெளியே செல்ல அனுமதி கிடையாது.
    • டீ கடைகள் செயல்படாது, என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    English summary
    Complete details on full extended Lockdown in Chennai and other 3 districts in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X