Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக தேர்தல் வரலாறு: சறுக்கிய பக்தவத்சலம்..! ராஜாஜியின் தந்திரம்! ஆட்சியைப் பிடித்த திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிரான திசையில் செயல்பட்டு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை வீழ்ச்சியடைய வைத்தார்.

'காந்தியின் மனசாட்சி' எனக் கருதப்பட்டவர் ராஜகோபாலாச்சாரி. இவருக்கு மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலில் காந்தி மறையும் வரை பெரிய செல்வாக்கு இருந்தது. ஆனால், அந்தச் செல்வாக்கு 'படிக்காத மேதை' காமராஜ் முன்னால் எடுபடவில்லை.

Confused Man Bhaktavatsalam Rajaji s trick DMK came to power

ராஜாஜி பதவி ஆசை

1952இல் தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பதவியில் அமர்ந்த ராஜாஜி, வயதளவில் மிகவு தளர்ந்துபோய் இருந்தார். அவரைக் காட்டிலும் இளையவரான காமராஜ் கட்சிக்கு புதிய சக்தியாக உருவெடுத்திருந்தார். அதை உணர்ந்தும் பதவியேற்க முடிவெடுத்தார் ராஜாஜி.

அவரது ஆட்சியில் தமிழக அரசு பொருளாதார ரீதியாகத் தள்ளாடியது. மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. நிதிநிலையைக் காரணம் காட்டி 6 ஆயிரம் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடினார் ராஜாஜி. ஒரு பக்கம் சொந்த கட்சிக்குள் காமராஜர் எதிர்ப்பு; மற்றொரு பக்கம் புதிய கட்சியாக உருவெடுத்திருந்த திமுக நிறுவனர் அண்ணாதுரையின் எதிர்ப்பு என இரண்டு பக்கம் இடி விழுந்தது அவருக்கு.

இனியும் சமாளிக்க முடியாது என உணர்ந்த ராஜகோபாலாச்சாரி 1954 மார்ச் மாதம் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அவரது விலகல் சரிந்துகொண்டிருந்த காங்கிரஸ் செல்வாக்கை மேற்கொண்டு கீழே செல்லாமல் தடுத்தது.

அவரைத் தொடர்ந்து முதல்வராக அமர்ந்த காமராஜர் தன் ஆட்சிக் காலத்தில் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட ராஜாஜியைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். முதலில் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். 1956இல் பள்ளி மானவர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் சேக்கையை 46 லட்சமாக உயர்த்திக் காட்டினார் என்றும் ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 17 ரூபாய் சம்பள உயர்வு அளித்தார் என்றும் காமராஜ் வாழ்க்கை வரலாற்றை எழுதி முருக தனுஷ்கோடி குறிப்பிடுகிறார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த காமராஜ், 133 மாநாடுகளை நடத்தி கல்விச்சாலைகளை அமைப்பதற்காக 6.41 கோடி ரூபாய் நன்கொடை திரட்டினர். அதில் 4 கோடி ரூபாய் ரொக்கமாகக் கிடைத்தது.

கல்வித்துறை, பாசனத்துறை, மின் உற்பத்தித் துறை எனப் பல துறைகளைத் தலைநிமிர்ந்து நடைபோடத் திட்டங்கள் வகுத்தார். 1957 மற்றும்1962 ஆகிய இரண்டு ஆட்சிக்காலத்திலும் காமராஜரின் சிறப்பான நிர்வாகத்திறனால் மாநிலம் வளர்ச்சி பெற்றது.

காமராஜர் தப்புக் கணக்கு

ஆனால், 'கே பிளான்' என்ற புகழ்மிக்க தனது திட்டத்தால் அவர் தேர்தல் அரசியலிலிருந்து விலகி கட்சியை வளர்க்கும் முடிவை ஏற்றார். மாநில அரசியலிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்படலானார்.

ஆகவே, அவரது பதவிக் காலத்தில் அதிக செல்வாக்கு இல்லாத பக்தவத்சலத்தை முதல்வராக அமர்த்தினார். பெரிய சமூக பின்புலம் இல்லாதவர் இவர். மேலும் தொண்டர்களின் ஆதரவு இல்லாதவர். காமராஜர் ஒருவரின் ஆதரவினால் முதலமைச்சரானார். இவர் கொண்டிருந்த தேசிய அரசியல் சிந்தனை தமிழ்நாட்டிற்கு எதிராக அமைந்தது.

தக்ஷ்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபாவின் தலைவராக நீண்ட காலம் செயல்பட்டவர் பக்தவத்சலம். இந்தியை மத்திய அரசு அலுவல் மொழியாகக் கொண்டுவர முற்பட்ட போது சிகப்புக் கம்பளம் விரித்து அதற்கு வரவேற்பு பத்திரம் வாசித்தவர். 'மெட்ராஸ்' என இருந்த மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்ற திமுக கோரிக்கை வைத்துப் போராடிய போது அச்சிந்தனைக்கு மாறாகச் செயல்பட்டவர்.
மீண்டும் 1963 இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்றது.

1964இல் பள்ளிகளில் இந்தியைக் கற்பிப்பது கட்டாயமாக்கும் முயற்சிகள் தொடங்கின. திமுக இந்திக்கு எதிராகக் களமாடியது. நேரடியாகக் கட்சி போராட்டமாக இது நடைபெறவில்லை. மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக இது எழுந்தது. 'தமிழ்நாடு மாணவர் இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு' என்ற குடையின் கீழ் மாணவர்கள் தமிழ் உணர்வோடு பொங்கி எழுந்தனர். இந்தி திணிப்பை நடைமுறைப்படுத்த 1965 ஜனவரி 26 ஆம் நாளை துக்க நாளாகக் கடைப்பிடிக்க திமுக கூக்குரல் எழுப்பியது. அதற்கு மாணவர்கள் தலைசாய்ந்தனர்.

மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் எங்கும் கறுப்புக் கொடி ஏற்றினர். தமிழ்க் கொடி வானில் பறந்தது. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. 7 பேர் மொழிப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உயிரைத் தியாகம் செய்தனர். மத்திய அரசு அடிபணியவில்லை. மூர்க்கமாக நடந்துகொண்டது. முதல்வர் பக்தவத்சலம் மானவர் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்தார். துப்பாக்கிச் சூட்டில் 66 பேட் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கலவரப் புகை மாநிலத்தை மூச்சடைக்கச் செய்தது.
காங்கிரசுக்கு எதிரான மனநிலை தமிழ் மக்களிடம் வேர்விடத் தொடங்கியது. காமராஜ் தன் ஆட்சிக்காலத்தில் செய்துவைத்துவிட்டச் சென்ற எந்த நல்ல திட்டங்களும் மக்கள் மனதில் நிலைகொள்ளவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு செய்தி பரபரப்பானது.

திமுக வளர்ந்த கதை

1952 தேர்தலில் வாக்குச் சேகரிக்கச் சென்ற போது பல ஊர்களில் அக்கட்சியின் தொண்டர்கள் விரட்டப்படும் நிலையே நிலவியது. அது இந்த மொழிப் போராட்டம் மூலம் மாறியது. மக்கள் திமுகவைக் கவனிக்கத் தொடங்கினர்.

அரிசி பஞ்சத்தை ஒழிப்பது, மொழி உரிமையை மீட்பது , மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவது எனப் பல புதிய முழக்கங்களை மக்கள் மனதில் இடம்பெற்றன. 'நியாய விலை கடைகள் மூலம் அரிசி குறைந்த விலைக்கு விநியோகிக்கப்படும் வரை அமைச்சர்கள் யாரும் சம்பளம் பெற மாட்டார்கள்' என திமுக வாக்குறுதி அளித்தது.

காமராஜர் தேசிய அரசியல் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியதால் காங்கிரஸ் செல்வாக்கு தமிழ்நாட்டில் சரியும் நிலை உண்டானது. தனக்குப் பதிலாக பக்தவத்சலம் இருப்பார் என நம்பிக் கொண்டிருந்த அவரது கனவு சிதைந்தது. ஆட்சியோடு அளித்துச் சென்ற காங்கிரசின் பலத்தை முற்றாகச் சரியச் செய்திருந்தார் பக்தவத்சலம்.

1954இல் முதல்வர் பதவியை இழந்த ராஜகோபாலாச்சாரி, 1957இல் காங்கிரசை விட்டு வெளியேறினார். சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். இந்திய அளவில் அக்கட்சி சில மாநிலங்களில் செயல்பட்டது. அதன் 1964 தொடங்கி 1979 வரை திமுகவின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்து ராஜாஜி உதவினார்.
1967இல் காங்கிரஸ் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு புதிய தலைவர் பதவியேற்றார்.

அவர் பெயர் சி.என்.அண்ணாதுரை. 'காகிதப் பூ மணக்காது; காங்கிரஸ் சோசியலிஷம் பலிக்காது' என்று அண்ணாதுரையின் அடுக்குமொழிக்கு மக்கள் கட்டுப்பட்டுப் போய் இருந்தனர்.
பொதுவுடைமை கொள்கையை முற்றிலும் எதிரியான ராஜாஜியை அருகில் வைத்துக்கொண்டு நேருவின் சோஷியலியத்தை அண்ணாதுரை விமர்சித்தார் என்பது வரலாறு.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+