கும்பகோணம் மேயர் வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநர் சரவணன் போட்டி- காங். அதிரடி அறிவிப்பு!
சென்னை: கும்பகோணம் மேயர் பதவிக்கான வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநரான சரவணன் போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
கும்பகோணம் 156 ஆண்டுகால நகராட்சி என்ற வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1866-ம் ஆண்டு கும்பகோணம் நகராட்சியாக உதயமானது. 1949-ல் முதல்நிலை நகராட்சி; 1974-ல் தேர்வு நிலை நகராட்சி என தரம் உயர்த்தப்பட்டது.

யார் யார்?
கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் கும்பகோணம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கடந்த முறை அதிமுக வசம் கும்பகோணம் நகராட்சி இருந்தது. கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் திமுக 39 இடங்களில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேயமக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தில் உதயசூரியனில் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் சிபிஎம் கட்சி 2 இடங்களிலும் போட்டியிட்டன. அதிமுக 47 இடங்களிலும், தமாகா ஒரு இடத்திலும் போட்டியிட்டன,.

யாருக்கு எத்தனை இடங்கள்?
இத்தேர்தலில் திமுக 37 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 2, சிபிஎம் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, விடுதலை சிறுத்தைகள் 1, அதிமுக 3, சுயேட்சைகள் 3 என வெற்றி பெற்றனர். திமுகவினர் அதிக இடங்களில் வென்றதால் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி திமுகவுக்கே என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். திமுவின் சு.ப.தமிழழகன், அசோக்குமார், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் மேயர் பதவிக்கான காய்களை நகர்த்தியும் வந்தனர். இந்த 3 பேரில் ஒருவருக்குதான் மேயர் பதவி என எதிர்பார்ப்பு நிலவியது.

காங். இன்ப அதிர்ச்சி
இந்நிலையில் திடீரென கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவித்தது. 3 சீட் வாங்கி 2 இடங்களில் ஜெயித்த நிலையில் ஒரு மாநகராட்சி மேயர் பதவியையே திமுக தலைமை அள்ளி தந்ததால் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனது. ஆனால் திமுக தலைமையின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் வார்டு கவுன்சிலர்களை திடுக்கிட வைத்தது. தங்களது குமுறலை கட்சி மேலிடம் தெரிவித்தும் வருகின்றனர் திமுக நிர்வாகிகள்.

காங். வேட்பாளர் அறிவிப்பு- திமுக கொந்தளிப்பு
இதனிடையே மேயர் வேட்பாளராக சரவணன் போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சரவணன் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக உள்ள சரவணனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு திமுகவினரை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. கும்பகோணம் மேயர் பதவியை அவ்வளவு எளிதாக திமுக கவுன்சிலர்கள் விட்டுத் தர மாட்டார்கள் என்றே அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications