புதிய வரலாறு.. ஈரோட்டில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெல்லும் - ரவீந்திரன் துரைசாமி
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெறுவார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை விட பன்மடங்கு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெறும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
திமுக கூட்டணி தேர்தல் மேலாண்மையில் மிகசிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதாவது எடப்பாடி பழனிசாமி தன்னை ஸ்டாலினுக்கு இணையான தலைவராக தன்னை உருவகித்துக்கொள்ளவில்லை. செந்தில்பாலாஜிக்கு இணையான தலைவராகவே தன்னை உருவகத்தார்.
கொட்டகையில் அடைத்து வைப்பது குறித்தெல்லாம் பேசியது அப்படிதான். தேர்தல் மேலாண்மையில் எடப்பாடி பழனிசாமியும் பெரிய ஆள்தான். பொதுத்தேர்தலில் சேலத்தில் அவரது உழைப்பால்தான் ஜெயலலிதாவே 2014 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஆனார்.

செந்தில்பாலாஜி ஃபார்முலா
ஆனால், திமுக அழகிரி திருமங்கலத்தில் செய்ததைவிட செந்தில்பாலாஜி ஈரோட்டில் செய்ததும், அதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தது கைகொடுத்து உள்ளது. அடிப்படையாகவே அவர்களுக்கு 50% வாக்குகள் இருக்கிறது. அதை நாம் மறுக்கவில்லை. கூட்டணி பலம், 50% வாக்கு பலத்துடன்தான் அவர்கள் போட்டியிட்டார்கள்.

வாக்கு சதவீதம்
ஈரோடு மாநகராட்சியை அவர்கள் கைப்பற்றும்போது 50 சதவீதத்துக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதிமுக 25%, பாஜக 4% என்ற பலத்தில் உள்ளார்கள். 39% ஆக இருந்த வாக்கு சதவீதம் 10 குறைந்து உள்ளது. இந்த தேர்தல் மேலாண்மையில் திமுக அணிக்கு வாக்குகள் கூடி, அதிமுக அணிக்கு வாக்குகள் குறைந்து உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இது வித்தியாசமான தேர்தல் மேலாண்மை. இடைத்தேர்தலில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சிலேயே ஒரு பதற்றம் தெரிந்தது. அவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவரும் தேர்தல் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டவர்தான். பன்னீர்செல்வமும் அமைதியாக இருந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும் அளவுக்கு செய்துள்ளார்.

அதிமுகவுக்குள் இருக்கும் கட்டாயம்
ஆளுமை என்ற அடிப்படையில் வேறு வழியில்லை. திமுகவுக்குதான் செல்ல வேண்டும். ஒரு குழுவாக எடப்பாடி பழனிசாமியுடன் நின்றுதான் அதிமுகவினர் ஆக வேண்டும். உள்ளுக்குள் செங்கோட்டையனை மையமாக வைத்து தலைமை மாற்றம் குறித்து பேசினாலும், எடப்பாடி பழனிசாமியை நம்பி நிற்க வேண்டிய சூழல்தான் வந்தது. அவர் பலவீனமாக உள்ளார் என்பதும் உண்மை.

1 லட்சம் வாக்கு வித்தியாசம்
இதே நிலை நீடித்தால் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய வெற்றி. மிகப்பெரிய தேர்தல் மேலாண்மை. இது ஒரு வரலாறு இடைத்தேர்தலில் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் தாண்டி திருமங்கலம் வரலாறு என்றால், அதைத் தாண்டிய வரலாறு இது.

எடப்பாடியின் பதற்றம்
செங்கோட்டையன் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமியும் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர். அவர் தேர்தல் ஒருங்கிணைப்பில் தோற்று இருக்கிறார். காரணம் அவரிடம் உள்ள பதற்றம். பதற்றத்துடனே அவர் அதை கையாண்டார். தங்கள் கட்சியில் தன்னோடு நின்றவர் எதிரணி சென்று சவால் விடும் அளவுக்கு பெரிதாக நிற்கிறார் என்பதால் அவர் இறங்கி வந்திருக்கக்கூடாது.

செந்தில் பாலாஜியுடன் போட்டி
முக ஸ்டாலினையே மையமாக வைத்து தன்னுடைய களத்தில் எடப்பாடி பழனிசாமி நின்றிருக்க வேண்டும். குறிப்பாக அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி திமுக செல்லும்போது மிகப்பெரிய அளவில் கரூர் மாவட்டத்தில் இவர் பேசினார். எதிர்க்கட்சியாக இருந்தே அரவக்குறிச்சியில் இரட்டை இலையைவிட உதயசூரியனில் அதிக வாக்குகளை எடுத்துவிட்டார்.

செந்தில் பாலாஜியின் வியூகம்
தேர்தல் பணிகளில் எடப்பாடி பழனிசாமி, அழகிரி, நேரு இடத்தில் செந்தில் பாலாஜி மிகச்சிறப்பானவர் என்பதை நிரூபித்து உள்ளார். ஸ்டாலினிடமும் நிரூபித்து இருக்கிறார். ஸ்டாலின்தான் அதற்கு முகம். எல்லாமே ஸ்டாலின் தான். கொங்கு மண்டலத்திலும் ஸ்டாலின் அதிமுகவை வீழ்த்தி திமுகவை வளர்க்க வேண்டும் என்ற முடிவில் செயல்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றி உள்ளார். இது மிகப்பெரிய வெற்றி. 60% வாக்குகளை பெறுவார்கள்." என்று தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications