இந்துக்களுக்கு எல்லாம் இலவசமாவா கொடுக்குறீங்க.. பா.ஜ.க.வை ட்வீட் போட்டு கலாய்த்த எம்.பி ஜோதிமணி!
சென்னை: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மக்கள் இப்போதுதான் ஒரு வழியாக மீண்டு வரும் நிலையில், கடுமையான விலைவாசி உயர்வு மக்களை பாடாய்படுத்தி வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து செல்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ 25 உயர்ந்து அதிர்ச்சியை கொடுக்கிறது. போதாக்குறைக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

ஜோதிமணி ட்வீட்
இந்த தாக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை, காய்கறிகள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளதால் மக்களுக்கு நாலாபுறமும் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.

பகல்கொள்ளை
இது தொடர்பாக ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ 25 உயர்வு.விரைவில் ரூ.1000 ஆகிவிடும்.சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு. இரண்டும் ஒரே நாளில். மோடி அரசின் பகல்கொள்ளையை மறைக்கவே #பாலியல்பாஜக இந்து,கடவுள்,தேசம் என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கு எல்லாம் இலவசமாகவா தருகிறார்கள்?'' என்று கூறியுள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ஆகியவை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியையும் அவர் டுவிட்டர் பதிவுடன் இணைத்துள்ளார்.

கே.டி.ராகவன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தவறாகப் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளம் ஒன்றில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக விசாரிக்க பா.ஜ.க குழு அமைத்துள்ளது.

கைது செய்ய வேண்டும்
இந்த விவகாரத்தில் கே.டி.ராகவனுக்கு எதிராக கடுமையாக பொங்கியெழுந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கே.டி.ராகவனை கைது செய்யும்படி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் நேரடியாக மனு கொடுத்தார். பாஜக, அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களை கைது செய்த தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜோதிமணி மனுவில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications