பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலையால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாஜக மட்டுமின்றி, திமுக, அதிமுக, தவெக, சீமானின் நாம் தமிழர் உள்பட அனைத்து கட்சிகளுக்கும் அண்ணாமலை சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விலகினார். பாஜகவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ள அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார். 'we the leader' என்ற அமைப்பை தனது இயக்கமாக தொடங்கி உள்ளது. இதன் இணையதள பக்கத்தின் வழியாக இன்று மாலை 5 மணி நிலவரப்படி 14 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

not-only-bjp-annamalai-likely-to-threat-for-tvk-and-other-parties-tamil-nadu-after-he-started-new-m

மேலும் இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாகவும், வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த புது அவதாரம் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுக, தவெக, சீமானின் நாம் தமிழர் என அனைத்து கட்சிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி உள்ளதால் அங்குள்ள அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதோடு அண்ணாமலை தலைவராக இருந்தபோது அடிக்கடி பாஜக பேசும்பொருளானது. இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை. அண்ணாமலையை போல் ஒரு இளம் தலைவரை பாஜக கண்டுபிடித்தால் மட்டுமே அது சாத்தியம்.

அதேபோல் அதிமுகவை எடுத்து கொண்டால் தற்போது உள்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தும், முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகியும் விஜய்யின் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருந்தது. இதனை இந்த தேர்தலில் தவெக உடைத்த நிலையில் தற்போது அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அங்கு செல்வாக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இது அதிமுகவை இன்னும் மோசமாக்கலாம்.

மேலும் திமுகவில் உள்ள நிர்வாகிகள் தற்போதைய சட்டசபை தேர்தல் தோல்வியால் வருத்தத்தில் உள்ளனர். விஜய்யின் வெற்றியை அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர்கள் நொந்துப்போய் உள்ளனர். இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் அண்ணாமலையின் அமைப்பில் இணையலாம். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது இந்த சட்டசபை தேர்தலில் 4 சதவீத வாக்குகளை மட்டுமேபெற்றுள்ளது. கடந்த முறையை ஒப்பிடும்போது 4 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. இதுவரை ஒவ்வொரு தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த நாம் தமிழருக்கு இந்த தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் காரைக்குடியில் சீமான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதற்கு விஜய்யின் அரசியல் வருகை தான் காரணமாகும். தொடர் தோல்வியால் துவண்டுள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் அண்ணாமலையின் அணியில் ஐக்கியமாகலாம். இதனால் நாம் தமிழருக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

அதேபோல் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மாற்றத்தை தேடிய பலரும் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். இதனால் விஜய் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டார். இன்னும் சொல்லப்பபோனால் தமிழகத்தில் திமுக - அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளை தாண்டி இன்னொரு கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்ற பிம்பத்தை விஜய் இந்த தேர்தலில் உடைத்து அதிகமான இளைஞர்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். இதுதான் அண்ணாமலைக்கு பெரிய அளவில் உந்துதலை கொடுத்துள்ளது. இதனால் தான் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

மேலும் முதல்வராக விஜய் அரசை நடத்துவது அவ்வளவு எளிது அல்ல. குறிப்பாக விஜய்யை விட அண்ணாமலை புள்ளி விவரங்களை சொல்லி அடித்து பேசுவார். இது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனை தவெக நிச்சயம் சமாளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஆளும் கட்சியாக எந்த கட்சி இருந்தாலும் எதிர்ப்பலை என்பது இருக்கும். இதனால் அதனை அறுவடை செய்யும் முனைப்பில் அண்ணாமலை உள்ளார். அதுமட்டுமின்றி விஜய்க்கு இளைஞர்களிடம் செல்வாக்கு உள்ளது. அதேபோல் அண்ணாமலைக்கும் இளைஞர்களிடம் செல்வாக்கு உள்ளது. இதனால் நிச்சயம் அண்ணாமலையின் அரசியல் வருகை தவெகவிற்கு பாதிப்பை தரலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+