சிஎம் அண்ணனுக்காக அனுசரிச்சு போறேன்.. வம்புக்கு இழுக்காதீங்க! தளபதிக்கு பதிலடி கொடுத்த ஜோதிமணி!
சென்னை: மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோருக்கு அடுத்த தேர்தலில் அவர்களுக்கு சீட் கூட தரக் கூடாது என திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி பேசியது காங்கிரஸை கடுமையாக கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது என கூறியுள்ளார் கரூர் எம்பியான ஜோதிமணி.
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரத்தில் இன்று மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக விமர்சித்தார்.
குறிப்பாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்பி ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசுகிறார்கள். இதனால் அடுத்த தேர்தலில் அவர்களுக்கு சீட்டு தரக்கூடாது என பேசி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தேவையில்லாமல் தன்னை வம்புகளுக்கு வேண்டாம் என தளபதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜோதிமணி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன்.
என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம். கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள்.
அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." என கூறியுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications