வம்பை விலைக்கு வாங்கிய ஆர்.எஸ்.பாரதி! திமுகவுக்கு புது தலைவலி! மாணிக்கம் தாகூர் எம்.பி.கண்டனம்!
சென்னை: காமராஜர் பற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆ.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பேசாத ஒன்றை பேசியதாக ஆர்.எஸ்.பாரதி கூறியது அநாகரீகமானது என மாணிக்கம் தாகூர் விளாசியுள்ளார்.
ஆ.ராசா, பொன்முடி, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.பாரதி போன்ற முக்கியப் பிரமுகர்களின் நடவடிக்கைகளால் திமுக தலைமைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி
திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என காமராஜர் கூறியதாகவும் கடைசியில் அவருக்கே கல்லறை கட்டியது திமுக ஆட்சி தான் எனவும் தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரையும், காமராஜர் அபிமானிகளையும் கொதிப்படைய வைத்துள்ளது. இதனிடையே இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அநாகரீகமான பேச்சு
''பெருந்தலைவர் காமராஜரை இழிவுப்படுத்தி இது போன்ற (திமுகவின்) அநாகரீகமான பொய்யான பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதியை வன்மையாக கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றும் வெட்டுவேன் என அரசியல் பேசியவர் இல்லை. அவர் புகழ் என்றும் வாழும்..'' என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர் எம்.பி.

தேவையற்ற பேச்சு
திமுக காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஒருவர், திமுகவின் அமைப்புச் செயலாளருக்கே கண்டனம் தெரிவித்துள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பதை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தலைமைக்கு தலைவலி
இதனிடையே ஆ.ராசா, பொன்முடி, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.பாரதி போன்ற முக்கியப் பிரமுகர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், திமுக தலைமைக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம்












Click it and Unblock the Notifications