உண்ணாவிரதம் எப்போது முடியும்? சசிகாந்த் செந்தில் சொன்ன பதில்.. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
சென்னை: தமிழகத்திற்கான கல்வி நிதி விடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். 4வது நாட்களாக உண்ணாவிரதம் தொடர்ந்திருக்கும் நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் உண்ணாவிரதம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.
மழலையர் பள்ளி முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வது, சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம், எந்தவொரு குழந்தையும் கல்வி கற்பதில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்வது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை கொண்டு கடந்த 2018ம் ஆண்டு சமக்ரா ஷிக்ஷா அபியான் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான நிதியும் வழங்கப்படுகிறது. அதாவது தனியார் பள்ளியில் 25% ஏழை எளிய மாணவர்களை சேர்க்க மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் நிதி சமக்ரா ஷிக்ஷா அபியான் கல்வி திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு கூறியதால், தனியார் பள்ளியில் 25% ஏழை எளிய மாணவர்கள் சேர்க்கையை நடத்த முடியாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த நிதியை விடுவிக்க கோரி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
போராட்டம் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. உணவு எடுத்துக்கொள்ளாததால் சசிகாந்த் செந்திலின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திமுக தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இது குறித்து சசிகாந்த் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னிடம் அறிவுறுத்தியுள்ளனர். தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து முடிவை எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications