Exclusive சங்கிலி பிச்சிக்கும்.. பாஜக முயற்சி தமிழ்நாட்டில் பலிக்காது.. சொல்வது நாகூர் தஸ்லீம்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபயணம் தொடங்கும் நிலையில், பாஜகவின் முயற்சி தமிழ்நாட்டில் நிறைவேறாது என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் நாகூர் தஸ்லீம். இனி அவரது பேட்டி:
கேள்வி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கவுள்ள பாதயாத்திரை தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்த நொடி வரை பாஜக தமிழ்நாட்டில் வளர்வதற்காக என்னென்னமோ செய்து வருகிறது. பாஜக என்ன செய்தாலும், தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி ஆகிவிட முடியாது, கண்ணாடி அணிந்தவர்கள் எல்லாம் காந்தி ஆகிவிட முடியாது, கோட் சூட் போட்டவர்கள் எல்லாம் அம்பேத்கர் ஆகிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு முயற்சி செய்கிறார்கள், அந்த முயற்சி தமிழ்நாட்டில் சாத்தியப்படாது. வட மாநிலங்களில் வேண்டுமானால், அவர்களின் மத துவேஷ அரசியல் பலன் தரலாம், மணிப்பூரில் இன்று பற்றி எரிவது போல அங்கு செய்யலாம். தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் வெற்றி பெறாது.
கேள்வி: ராமநாதபுரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை. எதற்காக ராமநாதபுரத்தை தேர்வு செய்துள்ளனர்?
தஸ்லீம்: ராமர் பாலம் உள்ளிட்ட அவர்களின் செண்டிமெண்ட் கருதி அங்கிருந்து அவர்கள் தொடங்க நினைக்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் அவர்களின் நோக்கம் வெற்றி பெறாது. அதிமுகவை வெட்டிவிட்டு தனித்து நிற்க முடியாது. 2014ல் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் தனியாக நின்று வென்றது போல ராமநாதபுரத்தில் ஒருபோதும் வெல்ல முடியாது.
கேள்வி: ஓபிஎஸ் வேண்டாம், எடப்பாடி போதும் என்ற முடிவை பாஜக தலைமை தீர்க்கமாக எடுத்துள்ளதே? கூட்டணி விவகாரத்தில் வலிமையாக ஒரு முடிவை பாஜக எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறதே?
தஸ்லீம்: கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது என சங்கிலியில் கட்டாத குறையாக எடப்பாடி பழனிசாமியை வைத்துள்ளனர். கூட்டணியை விட்டு விலகும் முடிவை ஈபிஎஸ் எடுத்தால், இப்போது திமுக அமைச்சர்கள் மீது நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுகள் அத்தனையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படும். சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் குடைச்சல் கொடுப்பார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்ற பிறகு அதிமுக, பாஜக உடனான கூட்டணியை கழற்றிவிடும். இப்போதைக்கு வேறு வழியின்றி பாஜகவின் கட்டளைகளுக்கு எடப்பாடி செவி சாய்க்கிறார்.
கேள்வி: மணிப்பூர் சம்பவம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தார் பிரதமர் மோடி. அதுகுறித்து..?
தஸ்லீம்: மணிப்பூர் கலவரம் இன்று நேற்றல்ல, கடந்த 3 மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் கூட உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் நடக்கும்போதுதான் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமித்ஷா 3 மாதங்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றுவிட்டு, 15 நாட்கள் கழித்து தான் மீண்டும் வரும்போது கலவரம் கட்டுப்படுத்தப்பட்டிருகக் வேண்டும் என்றார். மீண்டும் ஏன் போகவில்லை?
ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை முடிக்கும்போது பேசினார். பாதுகாப்பு அபாயம் இருக்கிறது என உளவுத்துறை எச்சரித்தது, ரத்தக்கறையோடு வரவேற்கப்படுவீர்கள் என்று சொன்னது, ஆனால், ரோஜாப்பூக்களோடு தேசம் என்னை வரவேற்றது என்று பேசினார். மக்களிடம் நெருங்குவதற்கு பாஜக அஞ்சுகிறது. நாடாளுமன்றத்தில் வாய் திறக்க மறுக்கிறார் பிரதமர் மோடி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பும், போய் வந்த பிறகும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார். பிரதமர் மோடி என்றைக்கு பத்திரிகையாளர்களிடம் பேசினார்? அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது என்றால் அங்கு சென்றிருக்கவே மாட்டார். மணிப்பூர் மாநிலமே பற்றி எரியும்போது, இவ்வளவு வலிமையான ராணுவத்தையும், போலீஸையும் வைத்துக்கொண்டு ஏன் கட்டுப்படுத்தாமல் இருக்கிறார் பிரதமர் மோடி?
கேள்வி: மணிப்பூரில் பாஜக அரசு திட்டமிட்டே கலவரத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளதா?
தஸ்லீம்: இந்த கலவரம் பாஜகவுக்கு தேவை. மைத்தேயி இன மக்கள் பாஜகவின் ஆதரவு நிலையில் தொடர வேண்டும் என நினைக்கிறது. கலவரம் பற்றி எரிந்து, அதன் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக நினைக்கிறது. பாஜகவின் அஜெண்டாவே இதுதான். கலவரத்தை கட்டுப்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு துளியளவும் இல்லை. ஏன் மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங்கை பதவியை விட்டு நீக்காமல் வைத்திருக்கிறார்கள்?
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார்












Click it and Unblock the Notifications