ராகுல் காந்தி அடித்து ஆடுறாரே.. தமிழ்நாட்டில் தனியாக யாத்திரை! திமுகவின் ஈகோவை சீண்டுகிறார்?
சென்னை: தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணிகளை செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை, பிரியங்கா காந்தியின் பேரணிக்கான பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பெரிய அளவில் கூட்டணிக்கான திட்டங்களை ராகுல் வகுத்து வரும் நிலையில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கிறதோ?
காங்கிரஸ் கட்சி 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் ஆளும் திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சில நாட்களிலேயே காங்கிரஸ் அடித்து ஆட தொடங்கி உள்ளது.
முன்பெல்லாம் காங்கிரசுக்கு திமுக தாண்டி பெரிய ஆப்ஷன் இருக்காது. ஒன்று திமுக, இல்லையென்றால் தனித்தே கூட்டணி உருவாக்க வேண்டும். அதிமுக பாஜகவுடன் இருப்பதால் அங்கே செல்ல முடியாது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.. இப்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.
காங்கிரஸ் பிரஷர் போடுகிறது
இதனால் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு பிரஷர் போடுகிறதோ என்று தோன்றுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களிலேயே அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்திக்கிறார். விஜயிடம் பேசுகிறார். அதேபோல் விஜயை பாராட்டி போஸ்டுகளை செய்கிறார்.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை இப்போதே பெற தொடங்கிவிட்டார். அவர், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த https://drive.google.com/drive/folders/1G711MOz3nNkg XGohJKlneblXZx DBaGVh? usp=sharing லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று அறிவிப்பும் வெளியிட்டு உள்ளார்.
திமுகவிற்கு காங்கிரஸ் நெருக்கடி
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த புதன்கிழமை, திமுக தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் திமுகவிடம் அதிக இடங்களை காங்கிரஸ் கேட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications