உஷார்! பாதயாத்திரை என்ற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்த திட்டம்.. காவல்துறையை அலர்ட் செய்யும் காங்கிரஸ்!
சென்னை: இந்தியா முழுவதும் வெறுப்பு அரசியல் செய்து வரும் பா.ஜ.க பாதயாத்திரை என்ற பெயரில் மத, சமூக பதற்றத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை மிகவும் எச்சரிக்கையாக செயல்படவேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்கிறார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. ராமேஸ்வரத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். அண்ணாமலையின் நடைபயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் 13 ஏப்ரல் 2019 அன்று பேசும் போது, 'இந்தியாவில் ஏழ்மையைப் போக்குவதே எனது கடமை. ஏழ்மையின் வலியை உணர்ந்தவன் நான். ஏனென்றால், ஏழைத்தாயின் மகன் நான் ரயிலில் பெட்டி பெட்டியாக ஏறி டீ விற்றவன். ஏழ்மையை அனுபவித்தவன். எனக்கு 300 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள். இந்தியாவின் ஏழ்மையைப் போக்குகிறேன் என்று பேசினார்'. மோடி சொன்னதை செய்துவிட்டாரா?
ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்லப்போகும் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பிரதமர் கூறியதை நிறைவேற்றிவிட்டார் என்று தமிழ்நாட்டு மக்களிடம் பேசுவாரா? பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம், ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பாதியாகக் குறைப்போம். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதைப் பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் பேசுவாரா அண்ணாமலை?
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வரி பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது குறித்தும், அதானி குழுமத்தின் மெகா முறைகேடுகள் குறித்த ஹிண்டென்பர்க் அறிக்கை குறித்தும், பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கொண்டுவந்தது குறித்தும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் 'ஒரே' என்ற முழக்கத்துடன் அனைத்தையும் மாற்றி வருவது குறித்தும், நாடாளுமன்ற மாண்பை சீர்குலைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாற்றுக்கருத்துக் கொண்டோரை பேசவிடாமல், பிரதான எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு செவிசாய்க்காமல் நாடாளுமன்ற மாண்பை சிதைத்தது குறித்தும் அண்ணாமலை பேசுவாரா?
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்தும், ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவர்களை ஆளுநர்களாக நியமித்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்குவது குறித்தும், ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை, ஊழல் செய்த அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி மறுக்கும் ஆளுநர் செயல்பாடுகள் குறித்தும், பாஜகவை எதிர்க்கும் அரசியல் பிரமுகர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை மூலம் பழிவாங்குவது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடம் பேசுவாரா அண்ணாமலை?
தற்போது மணிப்பூரில் பற்றி எறியும் பிரச்சனைகள் குறித்தும், மேலும், மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசும் உடந்தையாக செயல்பட்டது என்றும், மெய்தி சமூகத்தின் வன்முறையாளர்களுக்கு அரசு உதவி செய்கின்றது என்றும், தீவிரவாதக் குழுக்களுடன் மாநில முதல்வர் பைரன் சிங் நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று மணிப்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவுலியன்லல் ஹாவ்கிப் கூறினார். இவற்றை பற்றியெல்லாம் தனது பாதயாத்திரை மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மன தைரியம் உண்டா?
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும் சூழலில், இந்தியா முழுவதும் வெறுப்பு அரசியல் செய்து வரும் மதவாத கட்சியான பா.ஜ.க பாதயாத்திரை என்ற பெயரில் மத, சமூக பதற்றத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பா.ஜ.க. நடத்தவுள்ள பாதயாத்திரை விவகாரத்தில்; தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை மிகவும் எச்சரிக்கையாகயும், விழிப்புடணும் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?












Click it and Unblock the Notifications