இரவோடு இரவாக எம்எல்ஏ பதவி ராஜினாமா! பாஜகவில் இணைந்த விஜயதாரணி பரபர லெட்டர்.. என்ன காரணம் தெரியுமா
தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றுக் கட்சியினரைச் சேர்ந்தவர்களை பாஜகவில் இணைக்க அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானார்கள்.

பிரதமர் மோடி சில நாட்களில் தமிழகத்திற்கு வரும் நிலையில், அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையிலும் கலந்து கொள்கிறார். அப்போது மேலும் சில மாற்றுக் கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என கூறப்பட்டது.
விஜயதாரணி: அதன்படி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இருப்பினும், அப்போது அவர் அந்த செய்தியை முற்றிலுமாக மறுத்திருந்தார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட போது கூட, "நான் நெருப்பு.. என்னிடம் எல்லாம் யாரும் வந்து பேசவில்லை" என்று வீர வசனம் பேசியிருந்தார்.

அவர் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது அவர் முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் நேற்றைய தினமே பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட விரும்பியதாகவும் இருப்பினும் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்பட்டது.
ராஜினாமா காரணம்: லோக்சபா தேர்தலில் போட்டியிடக் கடந்த முறை சீட் கேட்டும் கிடைக்கவில்லை என்ற அவர், இந்த முறையும் கிடைக்காது என்பது போல தெரிந்ததால் காங்கிரஸில் இருந்து விலகியதாகத் தெரிவித்தார். இதற்கிடையே நள்ளிரவில் அவர் தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த நிலையில், விஜயதாரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜகவில் இணைந்த விஜயதாரணி மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நடவடிக்கை எடுக்கும் முன்பே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பரபர லெட்டர்: பதவியை ராஜினாமா செய்வதாகச் சட்டசபை தலைவருக்கு விஜயதாரணி தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். "எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதாரணி ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் அப்பாவு ஏற்றார்.. காங்கிரஸில் இருந்து விலகி விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் ராஜினாமா செய்திருந்தார். ராஜினாமா ஏற்கப்பட்டதால் விரைவில் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும்.. தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயதரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர்.. காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021இல் நடந்த விளவங்கோடு சட்டசபைத் தேர்தலில் விஜயதாரணி சுமார் 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications