5 தொகுதிகள் அடங்கிய பட்டியல்... திமுகவிடம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கொடுத்த லிஸ்ட்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் ஹார்ட் பீட் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சீட் கிடைக்குமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு சென்றுவிடுமா என விருப்பமனு கொடுத்த அனைவரும் ஏக எதிர்பார்ப்பில் இருப்பது தான்.

இதனிடையே திமுகவிடம் 5 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி அதில் 3 தொகுதிகளை கேட்டிருக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திமுகவிடம் கொடுத்த 5 தொகுதிகளின் பட்டியல் இது தான். பொள்ளாச்சி, திருச்செங்கோடு, பெருந்துறை, அரவக்குறிச்சி, ஈரோடு மேற்கு என 5 தொகுதிகளில் ஏதேனும் 3-ஐ ஒதுக்கீடு செய்யுமாறு கொங்கு ஈஸ்வரன் ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறார். இந்த பட்டியலில் உள்ள பெருந்துறையை பொறுத்தவரை காங்கிரஸும் கேட்கிறது.
பெருந்துறையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் போட்டியிட விரும்பி விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்காக அந்த தொகுதியை காங்கிரஸ் கேட்டு வரும் சூழலில் கொ.ம.தே.க.வும் கேட்கிறது.
இதேபோல் பொள்ளாச்சி தொகுதி இந்த முறை திமுகவுக்கு சாதகமாக கருதப்படுவதால் அங்கு மாவட்டச் செயலாளரான தென்றல் செல்வராஜை களமிறக்க திமுக தலைமை திட்டமிட்ட நிலையில் அதனையும் கொ.ம.தே.க. கேட்டிருக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கொடுத்த 5 தொகுதிகள் அடங்கிய பட்டியலில் எந்த 3 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில்பாலாஜி இந்தமுறை போட்டியிட உள்ளதால் அரவக்குறிச்சி தொகுதியை கொ.ம.தே.க. கேட்கிறது.
அந்த தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் உள்ளதால் அதனை காரணம் காட்டி காங்கிரசும் அரவக்குறிச்சி தொகுதியை எதிர்பார்க்கிறது.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications