23 வயதில் 19 அரசு தேர்வுகளில் சாதித்த சத்தீஸ்கர் பெண்! ஜனாதிபதி மாளிகையை அதிரவைத்த சாரு பாண்டே
டெல்லி: "அரசு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்த காலத்தில், ஒரு பெண் தன் 23 வயதிற்குள் 19 அரசுத் தேர்வுகளில் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்!" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது நிஜம்!
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே உள்ள தில்தா என்ற சிறிய பகுதியைச் சேர்ந்தவர் சாரு பாண்டே. வயது வெறும் 23 தான். இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளாகக் கருதப்படும் SSC (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்), IBPS மற்றும் எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அடுத்தடுத்து எழுதி, அசால்ட்டாக 19 தேர்வுகளில் பாஸ் செய்து ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இந்த அசாத்திய சாதனைக்காக, வரும் சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் (Rashtrapati Bhavan) நடைபெறும் புகழ்பெற்ற 'அட்-ஹோம்' (At-Home) விருந்தில் கௌரவிக்கப்பட உள்ளார் சாரு. இன்று இந்தியாவின் லட்சக்கணக்கான அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக மாறியிருக்கும் சாருவின் வெற்றிக் ரகசியம் என்ன? அவரே பகிர்ந்து கொண்ட சுவாரசியமான பக்கங்கள் இதோ!
சாதாரண மாணவி டூ அசிஸ்டென்ட் ஆடிட்டர்!
தற்போது சென்னையில் மத்திய அரசின் 'அசிஸ்டென்ட் ஆடிட்டர்' (Assistant Auditor) ஆகப் பணியாற்றி வரும் சாரு, தன்னை ஒருபோதும் 'அதிபுத்திசாலி' என்று சொல்லிக் கொள்வதில்லை.
"நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு சாதாரண மாணவிதான். கணக்கு பாடம் மட்டும் எனக்கு கொஞ்சம் நன்றாக வரும், மற்றபடி எல்லாரையும் போல ஆவரேஜ் ஸ்டூடென்ட் தான். எனது பெற்றோருக்கு நான் ஒரு பேராசிரியராக வர வேண்டும் என்பதுதான் ஆசை.
ஆனால், எனக்கு போட்டித் தேர்வுகளின் மீது ஆர்வம் வந்தது. என் முடிவுக்கு குடும்பத்தினர் முழு ஆதரவு தந்தனர். திறமை என்பதை விட, தொடர் உழைப்பும் சுய ஒழுக்கமும் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது" என்கிறார் சாரு புன்னகையுடன்.
சாருவின் 'கூல்' உத்தி
அரசுத் தேர்வுக்குப் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஒரு தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவு வரும் வரை நகத்தைக் கடித்துக் கொண்டு, டென்ஷனாகக் காத்திருப்பார்கள். ஆனால் சாருவின் பாணி முற்றிலும் வேறு!
அவர் ஒரு தேர்வு எழுதி முடித்த அடுத்த நிமிடமே, அதன் முடிவை நினைத்துக் கவலைப்படாமல் அடுத்த தேர்வுக்கானப் படிப்பைத் தொடங்கிவிடுவார்.
"ஒரு தேர்வின் முதல் மெரிட் லிஸ்ட்டில் என் பெயர் வராவிட்டால் என்ன, அடுத்த லிஸ்ட்டில் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் தேர்வு முடிந்ததும் அதைப்பற்றி ஓவராக யோசிக்காமல், அடுத்த டார்கெட்டை நோக்கி ஓட ஆரம்பித்துவிடுவேன்" என்கிறார் சாரு. இந்த பாசிட்டிவ் அப்ரோச் தான் அவரை மன அழுத்தமில்லாமல் ஓட வைத்துள்ளது.
தோல்வியைக் கண்டு பயப்படாத தைரியம்!
சாருவின் பயணத்திலும் ஆரம்பத்தில் சில தோல்விகள், சறுக்கல்கள் இருந்தன. ஆனால், அவர் அதை முட்டுக்கட்டையாக நினைக்காமல், அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்டார். தோல்வி என்பது பயணத்தின் ஒரு பகுதிதான் என்பதை புரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை தோற்கும் போதும் இன்னும் அதிக உத்வேகத்துடன் களமிறங்கினார்.
படிப்பு ஓகே... பிரியாணி, டூர் எல்லாம் எப்படி?
24 மணி நேரமும் புத்தகப் புழுவாக இருந்தால் தான் பாஸ் பண்ண முடியும் என்ற விதியை உடைத்துள்ளார் சாரு.
"எனக்கு சமையல் செய்வதிலும், ஊர் சுற்றுவதிலும் (Travel) அலாதி பிரியம். எவ்வளவு பெரிய தேர்வு நெருங்கினாலும், எனக்கான ரிலாக்ஸ் டைமை நான் விட்டுக்கொடுத்ததே இல்லை. மைண்ட் ஃப்ரீயாக இருக்க 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை சாதாரணமாக வாக்கிங் போவேன். சில நேரங்களில் குடும்பத்தோடு 5 முதல் 10 நாட்கள் வரை ஜாலியாக டூர் போய்விட்டு வருவேன்" என்று ஆச்சரியப்படுத்துகிறார் சாரு. கடின உழைப்புக்கு இணையாக மன அமைதியும் முக்கியம் என்பதற்கு இவரே சாட்சி!
அடுத்த டார்கெட்: 'UPSC' சிவில் சர்வீசஸ்!
கணக்கு பாடத்தின் மீதுள்ள ஆர்வத்தால், பொது நிதி மற்றும் வரிப் பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பிய சாரு, தற்போது ஆடிட்டிங் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால், 19 தேர்வுகளில் வென்ற பிறகும் அவரது வேட்கை அடங்கவில்லை. அடுத்து பிஹெச்டி (PhD) படிக்க வேண்டும், அதோடு இந்தியாவின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி (UPSC) எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே இவரது அடுத்த லட்சியம்!
சாரு பாண்டே இளைஞர்களுக்குச் சொல்லும் 'சிம்பிள்' அட்வைஸ்:
தோல்விகளைக் கண்டு ஒருபோதும் சோர்ந்து போகாதீர்கள். அரசு வேலைக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிர்ஷ்டத்தை நம்பாமல் சரியான திசையில் உழையுங்கள்.
தொடர்ந்து கடினமாக உழையுங்கள்.
பொறுமையைக் கைவிடாதீர்கள்.
உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கட்டும்.
ஒரு சறுக்கலோடு உங்கள் பயணத்தை நிறுத்திவிடாதீர்கள்!
எந்தவித குறுக்கு வழிகளும் இல்லாமல், அசாத்திய திறமையாளர் என்ற பந்தா இல்லாமல், வெறும் 'சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி' என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்துக் கொண்டு சிகரத்தைத் தொட்டுள்ள சாரு பாண்டே, நிஜமாகவே இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த ரோல் மாடல்!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications