மாநகராட்சி ஒப்பந்த சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் 81 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ஐகோர்ட் இவ்வாறு கூறியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுக்க உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தூய்மை பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்த அளவிலான ஊதியமே இவர்களுக்கு வழங்கப்படுவதால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் நீண்ட கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வந்த 81 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவில், 3 ஆண்டுகள் பணி செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ள ஒப்பந்த சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications