"பொதுச்செயலாளர்" எடப்பாடியாரே வருக.. அதிமுகவில் வெடித்து கிளம்பியது அடுத்த போஸ்டர் சர்ச்சை!
Recommended Video
சென்னை: அதிமுகவில் அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது... அதுவும் போஸ்டர் ரூபத்திலேயே சர்ச்சைகள் தமிழக மக்களை திணறடிக்கின்றன.
ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா சொன்னாலும் சொன்னார், யார் அந்த ஒற்றை தலைமை என்பதுதான் விவகாரமே!
ராஜன் செல்லப்பா யார் அந்த "தலை"என்பதை வெளிப்படையாக சொல்லாமல் போனதால், இடியாப்ப சிக்கல் அதிமுகவில் நீடித்து வருகிறது.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் நிலையில், இது துணை முதல்வருக்கு எதிரான கருத்து என்பது பொதுவாக பார்க்கப்படுகிறது.

பேனர்
ராஜன் செல்லப்பா பேசியது குறித்து நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என்பதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் அச்சிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.

எம்எல்ஏக்கள்
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை என்ற பொறுப்பை தக்க வைக்க காய் நகர்த்துகிறார் என்றும், கட்சி தலைவர் பதவி, முதல்வர் பதவி என இரண்டையுமே தானே வகிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் கசிய ஆரம்பித்தன. இது சம்பந்தமாக எம்எல்ஏக்கள் தரப்பினை அவர் சந்தித்து பேசினார் என்றும், 2 தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கே சென்று ஆதரவு கேட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

தீர்மானம்
அதேசமயம், பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட ஒற்றை தலைமை யார் என்பதை தீர்மானிக்கும் கூட்டமாகவே இது கருதப்பட்டது.

பொதுச்செயலாளர்
அந்த வகையில், அதிமுக தலைமை கழகம் அருகே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் "பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் கூட்டம் கூடுவதற்கு முன்பே.. எம்எல்ஏக்களும் முழுசா தலைமை கழகத்துக்கு வந்து சேராதநிலையில்.. எந்த ஒரு விஷயமும் கூட்டத்தில் பேசவே ஆரம்பிக்காத நிலையில், அதற்குள் எடப்பாடியார் "பொதுச்செயலாளரா?" என்று அப்பகுதி மக்கள் வியப்புடன் அந்த போஸ்டரை பார்த்தவாறே சென்றனர்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications