கூலி படத்தால் விஜய்க்கு வந்த பெரிய சிக்கல்.. தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் முன்.. பறந்த ஆர்டர்
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வரும் நாளை 21ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்தான் விஜய் தனது ஐடி விங் தரப்பிற்கு இது தொடர்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1 வாரமாக இணையம் மற்றும் செய்திகளில் கூலி படமே உச்சத்தில் உள்ளது. கூலி படம் பற்றியே நெட்டிசன்கள், மக்கள் பேசி வருகிறார்கள்.

கூலி படத்தால் விஜய்க்கு வந்த சிக்கல்
நல்லதோ, கெட்டதோ கூலி படத்தை பற்றியே பேச்சு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.
இதையடுத்தே தமிழக வெற்றிக் கழக ஐடி விங் உடனடியாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டை டிரெண்ட் செய்ய வேண்டும் என்று விஜய் சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளதாம். இதன் காரணமாகவே நேற்று காலையில் இருந்து தீவிரமாக #TVKMaduraiMaanadu, #தமிழகவெற்றிக்கழகமாநாடு போன்ற வார்த்தைகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. மீட்டிங் நாளை இருந்தாலும் நேற்றில் இருந்தே அதை டிரெண்ட் செய்ய இதுவே காரணம் என்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு
தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடையானது 200 அடி நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும், மாநாட்டு திடலில் 800 அடி நீளத்திற்கு நடைபாதை வசதியும் செய்யப்படுகிறது. இம்மாநாட்டில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டர்களின் வசதிக்காக 30 இடங்களில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், 200 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும் நிறுவப்பட்டு வருகின்றன. தொண்டர்கள் எளிதாக உள்ளே வந்து செல்ல சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழக மாநாடு - விஜய் திட்டம்
தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக நடத்தப்படும் மாநில மாநாட்டில் முக்கியமான சில அரசியல் தலைகளை, மாற்று கட்சியினரை மேடை ஏற்றலாமா அல்லது வேறு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாமா என்று விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மாதத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் மாநில கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.
விஜய் கவனம்
தமிழக அரசியலில் பெரிய ஆரவாரத்தோடு நுழைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் இதுவரை பெரிய "சம்பவம்" எதையும் செய்யவில்லை. அரசியலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கடுமையான வலிமையான எதையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் விரக்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன. விஜய் பெரிதாக போராட்டம் எதையும் மேற்கொள்ளவில்லை. களத்தில் நேரடியாக சென்று கடுமையான போராட்டங்களை மேற்கொள்ளவில்லை.
விஜய் மாநாடு முக்கிய முடிவு
அஜித் குமார் காவல் கஸ்டடி மரணத்தில் மட்டும் விஜய் போராட்டம் செய்தார். ஆனால் அதுவும் கூட 15 நிமிடம் மட்டுமே நடந்த போராட்டம் ஆகும். அந்த போராட்டம் பெரிய அழுத்தங்களை சந்திக்கவில்லை. பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஒருமுறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி களத்தில் மக்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுடன் ஓரணியில் இணைவோம், உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களின் மூலம் மக்களை சென்று சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக நடத்தப்படும் மாநில மாநாட்டில் முக்கியமான சில அரசியல் தலைகளை, மாற்று கட்சியினரை மேடை ஏற்றலாமா அல்லது வேறு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாமா என்று விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம்.
தமிழக வெற்றிக் கழகம் பக்கம் கவனம் திரும்பும் விதமாக முக்கியமான முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் அல்லது வேற்று கட்சியின் மூத்த அரசியல் தலைவர் யாரையாவது கட்சியில் இணைத்து மேடை ஏற்ற வேண்டும் என்று விஜய் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications