Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? முட்டி மோதும் விருதுநகர்! திணறுதா 187 சங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வருவதால் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 187 கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதுகின்றனர்.. கடந்த தேர்தலில் உதயநிதி கொடுத்த வாக்குறுதி போல இப்போதும் யாராவது தள்ளுபடி அறிவிப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதால், மேற்கொண்டு கடன் கொடுக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாடி வருகின்றன.. விருதுநகர் கூட்டுறவு சங்கத்தில் என்ன நடக்கிறது?

தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் கூட்டுறவு சங்கங்கள், சாமானிய மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன..

Cooperative Banks Gold Loan Waiver Virudhunagar Crop Loan Waiver Tamil Nadu Election 2026 187 Cooperative Societies

குறிப்பாக ஏழை எளிய விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர்க்கடன் வழங்குவதும், அவசரத் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து உடனடி நிதி பெறுவதும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த அம்சங்களாகும்..

கூட்டுறவு கடன் சங்கங்கள்

விரைவில் தேர்தல் வருகிறது.. இந்த நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 187 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள பலரும் கடன் பெறுவதற்காக திரண்டு வருகின்றனர்..

விவசாயிகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் பேரிடியாக அமையும் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது, அவர்களின் வாழ்நாள் சுமையைக் குறைக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது..

கடந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமான மக்கள் கடன் வாங்கினார்கள்.. இந்தத் தள்ளுபடி அறிவிப்புகள் ஏழை மக்களின் பணத் தேவையைத் தீர்த்து, அவர்கள் பழைய கடன்களில் இருந்து விடுபட ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.. தற்போது 2026 தேர்தலிலும் இது போன்ற தள்ளுபடி வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் மீண்டும் கூட்டுறவு சங்கங்களை நோக்கி வருகிறார்கள்..

பயிர்க்கடன் - நகைக் கடன்

இருந்தாலும், இந்த நன்மைகளுக்கு பின்னால் சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.. மாவட்டத்தில் உள்ள 187 சங்கங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை கடும் நிதி நெருக்கடியால் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன..

2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.245 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கடன்களை வழங்க நிதி இன்றி சங்கங்கள் திண்டாடி வருகின்றன..

வட்டி மானியங்கள்

அரசு அறிவிக்கும் தள்ளுபடிகளால் வரவேண்டிய வட்டி மானியங்கள் முறையாக வந்து சேராததே இந்த நிதித் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.. கடந்த முறை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி சொன்னதை நம்பி நகைக்கடன் வைத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், இந்த முறையும் யாராவது தள்ளுபடி அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் சங்கங்களை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்..

ஆட்சி மாறும் போதெல்லாம் கிடைக்கும் இத்தகைய கடன் தள்ளுபடிகள் தனிப்பட்ட முறையில் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன..

நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ் எப்போது

அன்றாட தேவைகளுக்காகவும் தேர்தல் கால சலுகைகளுக்காகவும் கடன் கேட்டு வரும் மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஆனால் நிதி வளமோ வறண்டு காணப்படுவதால், தர்மசங்கடமான சூழலில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்..

இந்த ஆண்டும் மீண்டும் ஒரு தள்ளுபடி அறிவிப்பு வெளியானால், ஏற்கனவே தள்ளாடி வரும் சங்கங்கள் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்ற அச்சமும் ஒருபுறம் நிலவுகிறது.. எது எப்படியிருப்பினும், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் இத்தகைய கூட்டுறவு அமைப்புகளைக் காப்பதும், அதே சமயம் மக்களுக்குத் தேவையான நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+