கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: யாருக்கெல்லாம் கிடைக்காது? அது என்ன பிளாக் லிஸ்ட்? அரசு குட் நியூஸ்?
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்பது என்ன? அனைவருக்குமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிடுமா? இந்த சலுகை யார் யாருக்கு வழங்கப்படுகிறது? எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது? வங்கிகளின் நடைமுறைகள் என்னென்ன? இவைகளை பற்றி விரிவாக சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்பது அரசின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய நலத்திட்டமாகும்..

கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் தள்ளுபடி
இந்தத் தள்ளுபடி சலுகை அனைத்து நகைக்கடன்களுக்கும் தானாக வழங்கப்படுவதில்லை.. மாறாக, நலிவடைந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளிட்ட தகுதியானவர்களுக்கு மட்டுமே, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது..
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே அல்லது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட எடை வரம்பிற்குள் உள்ள நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்காக பரிசீலிக்கப்படுகின்றன..
உதாரணமாக, சில திட்டங்களில் 5 சவரன் வரை உள்ள நகைக்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த எடை வரம்பு அரசாணைக்கு ஏற்ப மாறுபடக்கூடியதாக இருக்கும்.. மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தேதிக்குள் எடுத்த நகைக்கடன்களே தள்ளுபடிக்கு தகுதி பெறும்..
நகைக்கடன் தள்ளுபடி யார் யாருக்கு
கடன் பெற்றவர் உண்மையில் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த, அவரின் குடும்ப விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.. குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களில் யாராவது அரசு பணியில் உள்ளார்களா, வருமான வரி செலுத்துகிறார்களா, அல்லது கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளார்களா என்பதும் சரிபார்க்கப்படுகிறது.. இத்தகைய பொருளாதார வசதி அல்லது அதிகார நிலை கொண்டவர்களுக்கு பொதுவாக இந்தத் தள்ளுபடி சலுகை வழங்கப்படுவதில்லை..
தள்ளுபடி நடைமுறையின் போது, சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் தணிக்கைக் குழுவினர் அந்தந்த வங்கிகளில் உள்ள கடன் ஆவணங்களை முழுமையாகச் சரிபார்க்கின்றனர்..
நகைக் கடன் வழங்க நடைமுறைகள்
கடன் பெற்ற தேதி, கடன் வழங்கப்பட்ட நோக்கம், அடகு வைக்கப்பட்ட நகையின் எடை போன்ற விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகின்றன.. இந்த விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணுடன் இணைக்கப்படுகின்றன.. இதன் மூலம் ஒரே நபர் அல்லது ஒரே குடும்பம் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று முறைகேடாக தள்ளுபடி பெறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது..
அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு, தகுதியான பயனாளிகளின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த கூட்டுறவு வங்கிக் கிளைகளில் வெளியிடப்படுகிறது..
வெளிப்படைத்தன்மை
அதன் பின்னர், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான அசல் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகையை தமிழ்நாடு அரசே சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குகிறது.. இதன் மூலம் பயனாளிகளின் கடன் முழுமையாக முடிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறது.
.
இதற்குப் பிறகு, பயனாளிகள் தங்களது அடையாளச் சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை அணுகி, தேவையான நடைமுறைகளை பூர்த்தி செய்து தங்களது நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.. இதற்கான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் ரசீதுகள் வங்கி மூலம் முறையாக வழங்கப்படுகின்றன.. இந்த முறையின் மூலம் தகுதியான பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரணம் கிடைப்பதோடு, கூட்டுறவு வங்கி அமைப்பின் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது..
தமிழக அரசு குட் நியூஸ்
அதனால்தான், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - திமுக கட்சிகள், கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்க வாய்ப்புள்ளது. இதனால், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர்.
இது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும். இதனால், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications