Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்.. அடமானமின்றி ரூ.3 லட்சம் தொகையை தருமா தமிழக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக, ஆடு வளர்ப்பு, கறவை மாடு, கரி மூட்டத்தொழில், மகளிர் சுய உதவிக்குழு, பயிர்க் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வட்டியில்லாமல் வருடத்துக்கு வழங்கப்பட்டுவருகின்றன.. இதில், குறிப்பிட்ட கால தவணைக்குள் கடனை திரும்ப செலுத்தினால் மாநில அரசே அந்த அசலுக்குரிய வட்டியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது. அதிலும், புரட்டாசி ராபி பருவத்தில் சுமார் ரூ.160 லட்சம் வரை ஜாமீன், அடமானம் எதுவுமேயில்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய கோரிக்கை ஒன்று தமிழக அரசுக்கு விவசாயிகள் விடுத்துள்ளனர். அது என்ன?

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 4473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.. இந்த சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.

Cooperative societies Crop Loan TN farmers

பயிர்க் கடன் - தமிழக அரசு

எனினும், குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்கும் கடன் கிடைப்பதில்லை என்ற புகார்கள் கிளம்பின.. இதன்காரணமாகத்தான், பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவு துறை முடிவு செய்தது.. அதன்படியே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர்களை இயக்க தெரியாது என்பதால், பயிர்க்கடனை ஆன்லைனில் விண்ணப்பிக்க பிறரது உதவியைத்தான் நாட வேண்டியிருக்கிறது.. அப்போதும் விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்படாததால், கடன் கிடைக்காமல் போய்விடுகிறது.

பயிர்க்கடன் - இ சேவை

இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கவே இ சேவை மையத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதார் கட்டாயமாகும்.. இ சேவை மைய ஊழியர்கள், சங்கங்களின் பயிர் கடனுக்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, சங்க அதிகாரிகள், "TN Grains, tamilnilam உள்ளிட்ட வெப்சைட்களிலிருந்து விவசாயிகளின் ஆவணங்களை பரிசீலித்து, அன்றே வங்கி கணக்கில் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

இதற்கு பிறப்பு, இறப்பு, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் அரசு, இ - சேவை மையங்களில் வழங்கப்பட வேண்டும்..

புரட்டாசி ராபி பருவம்

இந்நிலையில், தற்போது புரட்டாசி ராபி பருவம் துவங்கியிருப்பதால், விவசாயிகள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள் எழுந்துள்ளன..

இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் சொல்லும்போது, புரட்டாசி ராபி பருவம் ஆரம்பமாகி உள்ளதால், பயிர்க்கடன் பெறுவதற்கான ஆவணங்களை விவசாயிகள் சேகரித்து வருகின்றனர். கடந்த வருடம் வரை முந்தைய ஆண்டு பயிர் அடங்கல் பசலி (சாகுபடி) மூலம் நடப்பாண்டுக்கு தேவையான பயிர்க் கடனை பெற்று வந்தனர்.

பயிர் அடங்கல் பசலி

ஆனால், இப்போது முந்தைய வருடம் பயிர் அடங்கல் பசலி மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கக்கூடாது என்றும், நடப்பாண்டுக்கு உரிய பசலியை பெற்றே கடன் வழங்கப்படும் என்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் சொல்கின்றன.. இது விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கலை தந்துள்ளது.

நடப்பாண்டுக்கு உரிய பசலி என்பது அக்டோபர் மாத இறுதியில் இருந்து நவம்பர் மாதம் வரை வழங்கப்படுவது வழக்கம். பயிர்க்கடன் பெற வேண்டுமென்றால் விவசாயிகள் அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதியிலேயே சாகுபடி ஆரம்பமாகிவிடுவதால், அப்போது தர வேண்டிய பயிர்க் கடனை 2 மாதங்களுக்கு பிறகு வழங்கினால் பலனை தராது..

3 லட்சம் கடன் தொகை

அதேபோல, அடமானமின்றி வழங்கப்பட்ட ரூ.1.60 லட்சத்தை ரூ.3 லட்சம் என உயர்த்தி அறிவித்த அரசு, நடப்பாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்தும்கூட, நடப்பாண்டிலும் அதற்கான உத்தரவு இதுவரை வரவில்லையாம். எனவே கடன் தொகையை ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அத்துடன், பயிர்க்கடன் வழங்குவதில் வழக்கமான நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+