Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுமை.. டாக்டர்களை கல்லால் அடிப்பதும், கட்டையால் தாக்குவதும்.. மிக பெரிய தவறு மக்களே.. நிறுத்துங்க!

சென்னை டாக்டரின் டசலத்தை எரிக்க விடாமல் மக்கள் வன்முறையில் இறங்கி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எங்களை கல்லையும், கட்டையையும் கொண்டு ஏன் அடிக்கிறீங்க? இதுதான் எங்களுக்கு தரும் நன்றிக்கடனா? இறந்து போன டாக்டரின் ஆத்மா சாந்தியடையுமா சொல்லுங்கள்" என்று சென்னையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்த டாக்டரின் சக நண்பர் பாக்யராஜ் எழுப்பி உள்ளது சாட்டையடி கேள்விகள்.. மக்கள் தொடர்ந்து அறியாமையில் டாக்டர்களின் உடல்களை அடக்கம் கூட செய்ய விடாமல் தாக்குதலில் இறங்கி வருவது இது 2வது முறை.. நம் தமிழக மக்களா இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது!

Recommended Video

    சென்னையில் கொடூரம்... தாக்குதல் நடத்திய மக்கள்

    தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரியும்.. இன்னும் மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த வைரஸுடன் தினம் தினம் போராடி கொண்டுதான் டாக்டர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் மருத்துவ உபகரணங்கள் ரொம்பவும் குறைவு.. ஆபத்து அதிகம்.. இருந்தபோதிலும் இருக்கிற கருவிகளை வைத்து சமாளித்துதான் பாதிக்கப்பட்ட மக்களை டாக்டர்கள் குணப்படுத்தி வருகிறார்கள். ஆனால் தொற்று பரவி உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது என்றால் இந்த நோயின் தன்மையை மட்டுமல்ல, சிகிச்சை தந்த டாக்டர்களின் தியாகத்தையும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    மறுப்பு ஆந்திரா

    மறுப்பு ஆந்திரா

    ஆனால் இதுதான் நம் மக்களுக்கு புரியவில்லை.. இதுவரை 2 டாக்டர்கள் இங்கு உயிரிழந்துள்ளனர்.. கடந்த வாரம் ஆந்திராவில் உயிரிழந்த டாக்டரை அம்பத்தூர் மயானத்தில் வீசி உள்ளனர்.. டாக்டரின் சடலத்தை எரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. பிறகு மயானத்துக்கு போன சடலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு.. பிறகு இங்கும் அங்கும் அலைக்கழித்து எரிக்கப்பட்டது.

    அறியாமை

    அறியாமை

    அதேபோலதான் இன்றைய நாள் சம்பவமும் நடந்துள்ளது.. இதற்கு காரணம், இந்த கொரோனாவைரஸ் தங்களுக்கும், தங்கள் பகுதிக்கும் வேகமாக பரவி விடும் என்பதால்தான்.. முழுக்க முழுக்க மக்களின் அறியாமை இது.. அச்சத்தின் வெளிப்பாடு இது.. ஆனால் இந்த விவகாரம் வன்முறை வரை சென்றதுதான் ஏற்க முடியாதது. டாக்டரின் சடலத்தை ஏற்றி ஆம்புலன்ஸ் மீது கற்களை கொண்டு வீசி உள்ளனர்... கையில் கிடைத்த கம்புகளை வைத்து அந்த டிரைவரை அடித்து உதைத்துள்ளனர்.

    அவமானப்படுத்துவதா?

    அவமானப்படுத்துவதா?

    நமக்கு சிகிச்சை தந்து கொண்டிருக்கும் டாக்டர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், இப்படியா அவர்களின் சடலத்தை அவமானப்படுத்துவது? இது போல் நடந்து கொண்டிருந்தால் நாளைக்கு பாதிக்கப்பட்டவர்களை எப்படி டாக்டர்கள் காப்பாற்ற துணிந்து முன்வருவார்கள்? அவர்களுக்கு ஒரு அச்ச உணர்வு வராதா? நமக்கும் இந்த கதிதானே என்ற மனோபாவம் எழாதா? இவர்களுக்கு மட்டுமில்லை.. இதுபோன்ற டாக்டர்களை சேவை செய்ய அனுமதித்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒருவித சலிப்பும், பீதியும் வராதா?

    ரத்தம்

    ரத்தம்

    ஆம்புலன்ஸ் டிரைவரை ரத்தம் சொட்ட சொட்ட யாராவது அடிப்பார்களா? அப்படி என்ன அவர் தவறு செய்தார்? இறந்து போன டாக்டர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடலை பிளாஸ்டிக் கவரால் உடனே சுற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகளை மத்திய சுகாதார துறை நிறைய வழிமுறைகளை சொல்லி இருக்கிறது.

    2 டாக்டர்கள்

    2 டாக்டர்கள்

    எனவே இறந்தவர் உடலிருந்து நோய் வேறு மக்களுக்கு பரவாது.. இதை பற்றின விழிப்புணர்வுதான் மக்களுக்கு தேவை.. இதை தமிழக அரசுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உடனடியாக விழைய வேண்டும்.. இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவாது என்பதை வலியுறுத்தி அதை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். மருத்துவருக்கே இந்த நிலை என்றால் நாளை சாதாரண மக்கள் நிலை என்னாகுமோ என்ற பயத்தை இந்த 2 டாக்டர்களின் மரணம் தெரிய வைத்துள்ளது.. கம்பை எடுத்து கொண்டு டிரைவரை அடிப்பதும், கல்லெறிந்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதும் வட இந்தியாவில் நிகழ்ந்து வரும் ஒன்று.. அது நம்ம ஊரிலும் பரவ தொடங்கி உள்ளது வேதனையை அளித்துள்ளது.

    விளக்கம்

    விளக்கம்

    இதற்காகவே தமிழக அரசு பிரத்யேகமாக ஒரு குழுவினைகூட ஏற்படுத்தலாம்.. அதன்மூலம் பிரச்சாரமாகவே மக்களிடம் இந்த வைரஸ் பற்றின புரிதலையும், விளக்கத்தையும் எடுத்து சொல்லலாம்..இனியும் இதுபோல நடக்காமல் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்... இல்லாவிட்டால் மக்களிடம் வெறுப்புணர்ச்சி அதிகமாகி விபரீதம் மேலும் பெருகும் அபாயம் ஏற்பட்டுவிடும். அப்போதும் அதற்குதான் சிக்கல் ஏற்படும். அந்த மாதிரி ஒரு நிலைமை வராமல் இப்போதே தடுக்க அரசு ஏதாவது செய்தாக வேண்டும்.

    சுயநலம்

    சுயநலம்

    நம் மக்கள் சொன்னால் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.. இயற்கையிலேயே மனிதாபிமானம், நன்றி உணர்வு இருப்பவர்கள்.. அதனால் இது முழுக்க முழுக்க அறியாமை என்றாலும் வன்முறையை எந்த ரூபத்திலும் ஏற்று கொள்ள முடியாது. சடலத்தை எரிக்க கூடாது என்பதில் சுயநலம்தான் தெரிகிறது.. யாருக்கும் மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று டாக்டர்கள் முடிவெடுத்துவிட்டால் நம் நிலைமை என்னாவது?

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி கொரோனா ஒழிப்புப் போராளிகளைக் கெளரவப்படுத்தும் வகையில் கை தட்டச் சொன்னார். மக்களும் கை தட்டினார்கள். அவர்களில் டாக்டர்களும் ஒருவர். இன்று அதே கைகளால் கல்லை எடுத்து தாக்கியுள்ளதை மனிதாபிமானம் உடைய யாராலும் மன்னிக்கவே முடியாது. இவ்வளவு சுயநலம் இருந்தால், அன்றைக்கு பிரதமர் சொனன்போது எதற்காக அனைவரும் கைகளை தட்டி டாக்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும்?

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    இறந்த மருத்துவரின் நண்பர் பாக்யராஜ் இதை பற்றி சொல்லும்போது, "அவர் ஒரு தலைசிறந்த டாக்டர்.. ஆனால் மக்கள் மரியாதை செய்யவில்லை... உதவி செய்ய வந்த டாக்டர்களுக்கு இதுதான் கதியா? கல்லையும், கட்டையையும் வைத்து அடிக்கவே, சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவந்தோம்.. எங்களை எல்லாம் கல்லை வைத்து ஏன் அடிக்கிறீர்கள்.. இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது.. இதுதான் எங்களுக்கு தரும் நன்றிக்கடனா? அவரின் ஆத்மா சாந்தி அடையுமா சொல்லுங்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. பாக்யராஜ் எழுப்பின இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+