தீயாக பரவும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்கள் ரிஸ்க் தான்... சுகாதார துறை புதிய கட்டுப்பாடுகள்
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

4ஆம் நாளாக 2000ஐ கடந்த கொரோனா
தமிழகத்தில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 8,84,094 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் 83,154 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 1,95,11,655 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழப்பும் டிஸ்சார்ஜும்
இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 12,700ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,463 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 8,56,548 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுதவதும் 14,846 பேர் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 மாவட்டங்கள் கஷ்டம்
சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது. சென்னையில் 874 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேருக்கும் கோவையில் 207 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சையில் 114 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 100 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார துறை
தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மாணவர்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல பொது நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கவும் Contact Tracingஐ அதிகப்படுத்தவும் தமிழக சுகாதார துறை முடிவு செய்துள்ளது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications