புதுச்சேரி.. திடீரென கொரோனாவால் அதிகம் பாதிப்படையும் குழந்தைகள்.. 3வது அலை அறிகுறியா?
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவு கொரோனா பரவ துவங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று புதுச்சேரியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒன்று முதல் 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கதிர்காமம் அரசு கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கேஸ்கள் பதிவாவது வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக புதுச்சேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தொடர்ந்து எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
முதல் அலையில், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையில் இளைஞர்கள், அதிலும் குறிப்பாக நடுத்தர வயது இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். இந்த நிலையில்தான் புதுச்சேரி புள்ளி விவரம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications