சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா : தினசரி 25000 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை - ககன்தீப் சிங் பேடி

ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க அலுவலர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா முதற்கட்ட பரிசோதனை மையங்களை 11இல் இருந்து 15 ஆக உயர்த்தவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் போது கடந்த மே மாதம் சென்னையில் 7,564 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு, படிப்படியாக குறைந்து கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி 105ஆக பதிவானது. கடந்த வாரம் வரை தினசரி பாதிப்பு 115 முதல் 132 வரையே பதிவாகி வந்தது. தற்போது, சென்னையில் புதிய பாதிப்பு 200 ஐ தொட்டுள்ளது.

Corona in Chennai RTPCR test for 25,000 people daily - Gagandeep Singh Bedi

சென்னையில் ஓமிக்ரான் பரவலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது.

சென்னையில் வசிப்பவர்கள் முகக்கவசம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Corona in Chennai RTPCR test for 25,000 people daily - Gagandeep Singh Bedi

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் தற்சமயம் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க அலுவலர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் அனைத்து மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பணி இடங்கள், கல்லூரிகள்,கல்வி நிறுவனங்களின் விடுதிகள் தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு அதனடிப்படையில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற் பரிசோதனை செய்யும் ஸ்கிரீனிங் சென்டர் ஏற்கனவே 11 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 15 இடங்களில் முதற்கட்ட பரிசோதனை மையங்களை செயல்படுத்தவும் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதற்கட்ட உடற் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்ல மாநகராட்சியின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 24 வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல நல மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+