மனைவிக்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்ட எடப்பாடி.. போன வேகத்தில் திரும்பிய நிர்வாகிகள்

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இதனால் தன்னை சந்திக்கவரும் யாரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். உதவியாளர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி தனிமைப்படுத்திக்கொண்டார்.

Recommended Video

    COVID-19 பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? மா சுப்பிரமணியன் பதில் *Health

    ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    இதனிடையே திமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளது. இந்த சூழலில் இருவரிடமும் தனித்தனியாக அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

    Corona infection in the wife of Edappadi Palanisamy he was Isolated

    அதிமுக நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனையடுத்து சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இதனால் தன்னை சந்திக்கவரும் யாரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை.

    அவரை காண சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர் விஜயபாஸ்கர்,சி.விஜயபாஸ்கர், காமராஜ், தங்கமணி ஆகியோர் சென்ற வேகத்திலேயே திரும்பி வீட்டுக்கு சென்றுவிட்டனர். கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+