தமிழகத்தில் 10 நாட்களில் 73% உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்.. இந்த 7 மாவட்டங்கள் வைரஸ் பரவல் மிக மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 73% உயர்ந்துள்ள நிலையில், கோவை, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிவேகமாக உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சில தினங்களாகக் குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1299 சிறார்கள் உட்பட 35,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பும் 397ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து டிராக்டர் விஜயானந்த் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்தது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 171094 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 35579 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் தற்போது பாசிடிவ் விகிதம் 22%ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 2,53,576 இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 2,63,390ஆக உயர்ந்துள்ளது கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 73% உயர்ந்துள்ளது.
குறிப்பாகக் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கொரோனா பரவல் மோசமாக உள்ளதால், அம்மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications