பதட்டத்தில் பெற்றோர்கள்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல், புதன் கிழமையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறை சார்பில், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் மழுவதும் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில், தடுப்பூசி சேலுத்துவதற்கு தகுதியானவர்கள், தங்களது வீடு அருகேயுள்ள சிறப்பு முகாம்களுக்குச் சென்ற தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.

இன்று 37-வது சிறப்பு முகாம்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 37-வது சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்கள் என 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தவணை தடுப்பூசிகள்
கொரோனா தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். மேலும், ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்த வேண்டிய நபர்களும், இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமுக்குச் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

புதன்கிழமை தடுப்பூசி முகாம்
இந்நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள், அடுத்த மாதம் முதல் இனி வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்ததாகவும், இதுவரை மொத்தம் 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளிக்குச் சென்று தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என கூறினார்.

பள்ளிக்கு விடுமுறை இல்லை
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சல் தொடர்பாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என அவர் தெரிவித்தார். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications