1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 3882 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 94049 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 3500+ கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

தமிழகத்தில் வேகமாக நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று 2852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 52926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 39856 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

ஆனால் இன்னொரு பக்கம் தமிழகத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று 63 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதில் அதிகமான நபர்கள் 50+ வயது கொண்டவர்கள். தமிழகத்தில் மொத்தமாக 1264 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

இன்று 31521 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 122224 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 30507 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1147193 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து

சென்னைக்கு அடுத்து இன்று மதுரையில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 2858 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 226 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 5648 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 948 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+