இந்த 4 அறிகுறிகள் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.. ஓமிக்ரானாக இருக்க சான்ஸ் அதிகம்.. கவனம்!
சென்னை: ஓமிக்ரான் கொரோனா காரணமாக ஏற்படும் சில அறிகுறிகள் டெல்டா கொரோனா மூலம் ஏற்படும் அறிகுறிகளை விட வித்தியாசமாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 21 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று பரவி உள்ளது.

லேசான அறிகுறிதான் இருக்கிறது
டெல்டாவோடு ஒப்பிடும் போது ஓமிக்ரான் மிக மிக வேகமாக பரவுகிறது. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளில் இருந்து ஓமிக்ரான் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஆபத்து என்ற அளவில் பார்த்தால் ஓமிக்ரான் அத்தனை ஆபத்து கொண்டதாக இல்லை. நிறைய கேஸ்கள் வந்தாலும் ஓமிக்ரான் காரணமாக ஏற்படும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

டெல்டா அறிகுறிகள்
டெல்டா அறிகுறிகள் என்று பார்த்தால் வாசனை இழப்பு பலருக்கு முக்கிய அறிகுறியாக இருந்தது. இரண்டாவது சுவை இழப்பு முக்கியமான அறிகுறியாக இருந்தது. அதேபோல் குளிர், உடல் கூச்சம் மூன்றாவது அறிகுறியாக இருந்தது. மோசமாக டெல்டா நோய் தாக்கிய நபர்களுக்கு மூச்சு இறைப்பு ஏற்படும் அறிகுறிகள் வந்தது. இதுதான் டெல்டாவின் 4 முக்கிய அறிகுறியாக இருந்தது.

அறிகுறிகள்
ஆனால் ஓமிக்ரான் காரணமாக இந்த 4 அறிகுறிகள் ஏற்படுவது இல்லை. மாறாக வேறு சில 4 வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படுகின்றன. அதில் உடல் சோர்வு முக்கியமான அறிகுறியாக இடம்பிடித்துள்ளது.

மூட்டு வலி
இது போக மூட்டுகளில் ஏற்படும் வலி இரண்டாவது பெரிய முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக சளி அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சளி இருந்தால் அது ஓமிக்ரானாக இருக்கலாம். டெல்டா தாக்கியவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் இல்லை. ஓமிக்ரான் காரணமாக மூச்சு பிரச்சனை பெரிதாக இல்லை.
Recommended Video

ஆற்றலை குறைக்கும்
கடைசியாக தலைவலியும் நான்காவது பெரிய ஓமிக்ரான் அறிகுறியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓமிக்ரான் கொரோனா பெரிய அளவில் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. 50 உருமாற்றங்கள், அதில் 32 உருமாற்றங்கள் புரோட்டினில் ஏற்பட்டது என்பதால் ஓமிக்ரான் கொரோனாவின் அறிகுறிகள் அதிகம் வித்தியாசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications