சென்னைக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கலியே.. இன்று ஒரே நாளில் 15 பேர் பலி.. பாதிப்பு 1089
சென்னையில் இன்று 1089 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: மாவட்டங்களில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாகவே இருந்தாலும், சென்னைதான் அதில் முதலிடமாக உள்ளது.. இன்று ஒரேநாளில் பாதிப்பு 1,089 பேர் என்றும், அதில் 15 பேர் மரணமடைந்தனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை சார்பில் கொரோனா நிலவரம் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.. அதில், தமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... 66 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,089 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 66 பேர் (அரசு மருத்துவமனை-43, தனியார் மருத்துவமனை -23) பலியாகி உள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மாவட்டங்களில் சென்னைதான் பாதிப்பில் முதலிடமாக உள்ளது.. பாதிப்பு 1,089 பேர் என்றும், இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 15 பேர் மரணமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 642 பேருக்கு கொரோனா தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலத்தில் 311 திருவள்ளூரில் 265 பேரும், கடலூர் 250 பேரும், திருப்பூரில் 188 பேரும், விருதுநகரில் 146 பேரும், விழுப்புரத்தில் 126 பேரும், திருவாரூரில் 143 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதில், திருப்பூரில் 9 பேரும், சேலத்தில் 5 பேரும் மரணமடைந்துள்ளனர். வேலூரிலும் இன்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக இருந்தாலும், இந்த மரண விகிதத்தை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைப்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது... தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு கவனித்து கொள்வதாகவும் ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications