சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பி.கே. 8 அடி வைத்தால்.. 16 அடி பாயும் எடப்பாடியார்.. கொரோனாவுக்கு நடுவிலும்.. முட்டி மோதும் கட்சிகள்

பிகேவின் வியூகங்களை தவிடுபொடியாக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: பிகே 8 அடி எடுத்து வைத்தால், எடப்பாடியார் 16 அடி எடுத்து வைத்து திமுகவின் மொத்த வியூகங்கள், உத்திகளையும் நொறுக்கி அடித்துவிடுகிறார்.. கொரோனா யுத்தத்திற்கு நடுவே மறைமுக மோதல்களும், போட்டிகளும் நிறையவே ஏற்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கதாய் அமைந்து வருகின்றன!!

Recommended Video

    பி.கே. Vs எடப்பாடி... கொரோனாவுக்கு நடுவிலும் முட்டி மோதும் கட்சிகள்

    கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு தமிழகத்தை ஆட்கொள்ளும் என்று நமக்கு ஆரம்பத்தில் தெரியாது.. திமுக சார்பில் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக அழைத்து வந்தபோது அதிகம் அதிருப்திக்குள்ளானது அதிமுகவை விட திமுகவில் உள்ள மூத்த தலைகள்தான்.. இன்னமும் பிரசாந்த் கிஷோரை அனைவருமே அக்கட்சிக்குள் ஏற்கிறார்களா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை.

    எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் திமுக தலைவருக்கு இருக்கிறது.. அதனால் கொள்கைக்கு மாறான ஒருசில விஷயங்களை பிகே அமல்படுத்த போவதாக தகவல்கள் கசிந்தன.. குறிப்பாக சிறுதெய்வ வழிபாடு வியூகத்தை கையில் எடுத்து அதன்மூலம் இந்துக்களின் வாக்குகளை வளைக்கவும் ஒரு எண்ணம் இருந்தது.. இந்துக்களை தவிர, சிஏஏ போராட்டத்தில் எவ்வளோ முயன்றும் அதிமுகவை சிறுபான்மையினருக்கு எதிரான தோற்றத்தை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை.

    விளக்கங்கள்

    விளக்கங்கள்

    இந்த சமயத்தில்தான் கொரோனா நுழைந்தது.. வீரியம் குறைந்திருந்தபோது அதிமுகவின் செயல்பாடுகளை பாராட்டிய திமுக, தொற்று பாதிப்பு கூடியதும், எதிர்ப்பு, கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்தது.. வழக்கம்போல் விளக்கங்கள், பேட்டிகளை தந்து திமுகவை தினந்தோறும் ஆஃப் செய்து வருகிறார் முதல்வர்.. இதே காலகட்டத்தில்தான் அதிமுகவுக்குள்ளேயே விஜயபாஸ்கரின் செல்வாக்கு ஓங்க தொடங்கியது... அதற்கும் கடிவாளம் போட்டு ஒதுக்கினார்.. அடுத்து பீலா ராஜேஷ் வருகை ஆரம்பமானது.. மொத்த தமிழ்நாடும் பீலாவை உற்று நோக்க தொடங்கியபோது அவரையும் மாற்றி, சண்முகத்தை முன்னிறுத்தினார்.

    விஜயபாஸ்கர்

    விஜயபாஸ்கர்

    அதாவது, கொரோனா பரவல் தடுப்பு விஷயங்களில் தன்னுடைய செயல்பாடுகள் மட்டுமே இருப்பது போல முதல்வர் கவனமாக கவனித்து கொள்கிறார்.. தமிழ்நாட்டில் கொரோனா ஒழிப்பு என்றால் முதல்வர் பங்கை தவிர வேறு யாருடைய பங்கும் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.. அதனால்தான் மாலை நேரங்களில் கொரோனா அப்டேட்களை தருவதற்கு யாராவது ஒருத்தர் இருந்தால் போதும், அந்த ஒருத்தர் விஜயபாஸ்கரோ, பீலாவோ, சண்முகமோ என்ற பொதுப்படையாக நினைக்க வைத்துவிட்டார்... இதுதான் முதல்வரின் மாஸ்டர் பிளான்.. துணை முதல்வரைகூட கொரோனா விவகாரத்தில் ஒதுக்கிவிட்டு தனி ஒரு ஆளாகவே டீல் செய்து வருகிறார்!! இதனால் உள்கட்சி மட்டும் அல்ல எதிர்க்கட்சியும் சேர்ந்தே ஆஃப் ஆனது!!

    ஆலோசகர்

    ஆலோசகர்

    அதுமட்டுமில்லை.. முதல்வரின் இந்த அதிரடிகளுக்கு பின்புலமாக இருப்பது சுனில் என்றும் தகவல்கள் கசிந்தபடியே உள்ளன... திமுகவின் A to Z சூத்திரதாரிதான் சுனில்.. பிகே-வுடன் கைகோர்த்து வேலை பார்த்த அனுபவம் உடையவர்.. ஸ்டாலினுக்கு நெருக்கம்.. அரசியல் ஆலோசகர்.. "நமக்கு நாமே" பயணத்தில் ஸ்டாலினின் கலர் கலர் டிரஸ்.. நடைபயணம், சைக்கிள் பயணம், டீ குடித்தது, வாக்கிங் போனது, நாத்து நட்டது.. இப்படி ரசிக்கும்படியான வியூகங்களை வகுத்து கொடுத்தது சுனில் தலைமையிலான டீம்தான்.. திமுக தலைமை குடும்பத்தில் அதிகாரம் மிக்க நபராக வலம் வந்த சுனில் மறைமுகமாக எடப்பாடியாருக்கு வியூகம் அமைத்து தருவதாகவும் சொல்லப்படுகிறது.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    முதல்வரின் புரோகிராம், பிரஸ்மீட் கட்சி கூட்டம், எல்லாத்தையும் பிளான் செய்வது சுனில் டீம்தான் என்பது கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், ஸ்டாலினை பகிரங்கமாக பிரஸ்மீட்டில் விளாசுவதிலேயே இதை உணர முடிந்தது.. அதுமட்டுமல்ல.. தன்னுடைய ட்விட்டரை முதல்வர் நன்றாகவே கையாளுகிறார்.. ஆரம்பத்தில் விவசாயி முதல்வர் என்றுதான் மக்கள் மனதில் அறியப்பட்டார்.. ஆனால் இப்போது அப்படி அல்ல.. யார் என்ன பதிவு கேட்டாலும், கேள்வி கேட்டாலும், உதவி கேட்டாலும் நேரடியாக ஓடோடி வருகிறார் எடப்பாடியார்.. ஆறுதல் சொல்கிறார்.. உதவி செய்கிறார்.

    விவசாயி முதல்வர்

    விவசாயி முதல்வர்

    இப்படி இந்த கொரோனா நேரத்திலும் ட்விட்டரையும், அதன்மூலம் மக்களின் ஆதரவையும் நிறைவாகவே பெற்று விட்டார்.. பொதுவாக ஒரு கட்சியின் ஐடி விங் தான் அனைத்து செயல்பாடுகளையும் புரமோட் செய்யும் என்றாலும், "விவசாயி முதல்வர்" ஹைடெக் முதல்வராக உருவெடுத்து வருகிறார்!! இதையெல்லாம் செய்ய வந்ததுதான் பிகே டீம்.. பிரசாந்த கிஷோர் என்னவெல்லாம் செய்து அதிமுகவை வீழ்த்த நினைத்தாரோ அவை அத்தனையையும் தனி ஒரு நபராக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.

    ஒன்றிணைவோம் வா

    ஒன்றிணைவோம் வா

    "எங்க மாநில டெல்லி முஸ்லிம்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், ரம்ஜான் ஆரம்பிச்சாச்சு" என்று டெல்லி முதல்வருக்கு ஒரே ஒரு லட்டரை போட்டு சிறுபான்மையினர் மக்களின் அன்பைப் பெற்றார். இப்போது திமுகவின் பிகே டீம் "ஒன்றிணைவோம் வா" என்ற முழக்கத்தை அடுத்ததாக முன்வைத்துள்ளது.. இதற்கும் எடப்பாடியார் என்னென்ன உத்திகளை கையாண்டு முறியடிப்பார் என தெரியவில்லை.. ஆனால் முதல்வரா? ஸ்டாலினா என்பதுபோய்.. முதல்வரா? பிகே?வா என்ற நிலைதான் மறைமுகமாக சென்று கொண்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்!

    English summary
    coronavirus: cm edapadi palanisamy is breaking DMK's strategies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X