ஊரடங்கு தளர்வு.. நாடு முழுக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு.. புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நாடு முழுக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
சென்னை: நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நாடு முழுக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என்று பார்க்கலாம்!
Recommended Video
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 411 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக 15 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது நாடு முழுக்க மத்திய அரசு மூலம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டள்ளது. இதில் இன்று முதல் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடுகள் எப்போதும் போல தொடரும்.
இந்தியா முழுக்க இன்று முதல் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் மே 3 வரை தொடரும். அதேபோல் சில சேவைகளுக்கும், பணிகளுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விலக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் துறைகள் முறையாக தனி மனித விலகலை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பின்வரும் துறைகள் எப்போதும் போல ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் செயல்படும்:
- ஆயுஷ் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளும் செயல்படும்
- அங்கிகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்கும் தனியார் நிறுவனங்கள், கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றும் நிறுவனங்கள் செயல்படும்.
- அனைத்து விதமான விவசாய துறை நிறுவனங்களும் செயல்படும், அதாவது விவசாய உற்பத்தி, விற்பனை, விவசாய பொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வது தொடரும்.
- மீன்பிடித்தல், கடல், உள்நாட்டு, மீன்வளத் தொழில் செயல்படும்
- தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள் அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்கள் உடன் செயல்படும்
- பால் பொருட்களை பதப்படுத்துதல், பேக்கேஜிங், விநியோகம் அனுமதிக்கப்படும்
- தேயிலை, காபி, ரப்பர், முந்திரி பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் விற்பனை அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்கள் உடன் அனுமதிக்கப்படும்
- கால்நடை வளர்ப்பு பண்ணைகள், கோழி பண்ணைகள், முட்டை உற்பத்தி நிலையம் அனுமதிக்கப்படும்
- கால் நடை தீவன உற்பத்தி அனுமதிக்கப்படும்
- ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் காப்பகம் செயல்படும்
- டிபிடி பணப் பரிமாற்றங்கள் வழங்கப்படும் வரை சாதாரண வேலை நேரத்தின்படி வங்கி கிளைகள் இயங்கும்
- இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்கும்
- பராமரிப்பு இல்லங்கள், சிறார்களுக்கு பாதுகாப்பு இடங்கள், குழந்தைகள் காப்பகங்கள் இயங்கும்
- சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்குதல், EPFO வின் வருங்கால வைப்பு நிதி சேவைகள் செயல்படும்
- 15 நாட்களுக்கு ஒரு முறை உணவுப் பொருட்களை விநியோகிக்க அங்கன்வாடிகள் செயல்படும். பயனாளிகள் அங்கன்வாடிகளுக்கு செல்ல கூடாது, பொருட்களை வீட்டிற்கே கொண்டு செல்ல வேண்டும்.
- ஆன்லைன் மூலம் கற்பித்தல் / தொலைதூர கற்றல் செயல்படும்
- MNREGA எப்போதும் போல செயல்படும்
- மத்திய, மாநில துறை நீர்ப்பாசன திட்டங்கள் எப்போதும் போல செயல்படும்
- எண்ணெய் மற்றும் எரிவாயு துறை செயல்படும்
- அஞ்சல் சேவைகள் செயல்படும்
இன்றில் இருந்து அனுமதிக்கப்படும் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் விவரம்:
- ஐடி மற்றும் ஐடி தொடர்பான சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்
- அச்சு, மின்னணு ஊடகம், தொலைக்காட்சி ஒளிபரப்பு, டி.டி.எச், கேபிள் சேவைகள் இயங்கும்
- அரசாங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே டேட்டா மற்றும் கால் சென்டர் மையங்கள் செயல்படும்
- கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் செயல்படும்
- இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்படும்
- அனுமதி பெற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்
- கூரியர் சேவைகள் செயல்படும்
- துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றின் கிடங்கு சேவைகள் செயல்படும்
- அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்பதற்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை சேவைகள் செயல்படும்
- சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், மோட்டல்கள் இயங்கும்
ஏப்ரல் 20 க்குப் பிறகு மே 3 வரை அனுமதிக்கப்படாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள்:
- மருத்துவ காரணங்கள், பாதுகாப்பு நோக்கங்கள் தவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணம் செயல்படாது
- ரயில்கள் இயங்காது
- பொது போக்குவரத்துக்கான பேருந்துகள் இயங்காது
- மெட்ரோ ரயில் இயங்காது
- மருத்துவ காரணங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட சேவைகள் தவிர மற்ற பணிகளுக்காக மாநிலங்களுக்கு இடையேயான, மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படாது
- அனைத்து கல்வி பயிற்சி, பயிற்சி நிறுவனங்களும் செயல்படாது
- அரசின் பட்டியலில் இல்லாத தொழில்துறை மற்றும் வணிக சேவைகள் செயல்பட முடியாது
- அரசின் பட்டியலில் இல்லாத ஹோட்டல், லாட்ஜ் சேவைகள் செயல்படாது
- டாக்சிகள், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் செயல்படாது
- சினிமா அரங்குகள், மால்கள், வணிக மையங்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், தியேட்டர்கள், சட்டசபை அரங்குகள், ஆடிட்டோரியங்கள் செயல்படாது
- சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது
- 20 பேருக்கு மேல் இல்லாத இறுதிச் சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும்
ஏப்ரல் 20க்கு பின்பும் தொடரும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்:
- புகையிலை, குட்கா, மதுபான விற்பனைக்கு தடை
- பொது இடங்களில் எச்சில் துப்புதல் தண்டனைக்குரிய குற்றமாகும்
- தனி மனித இடைவெளியுடன் கிராமப்புறங்களில் உள்ள தொழில்கள் அனுமதிக்கப்படும்
- இறுதி சடங்குகள் மற்றும் திருமணங்களில் கூட்டங்கள் கண்காணிக்கப்படும்
- மாஸ்க் அணிவது, முகத்தை மறைப்பது கட்டாயம் ஆகும்
- தொழில் நிறுவனங்கள் கட்டாய ஸ்கிரீனிங் நடத்த வேண்டும். மேலும் ஷிப்டுகள் மற்றும் மதிய உணவு இடைவேளையின் இடையே 1 மணிநேர இடைவெளியை பின்பற்ற வேண்டும்
ஹாட் ஸ்பாட் என்றால் என்ன?
ஒரு இடத்தில் 6 அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதி ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்படும். இந்த இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ அதிக வாய்ப்புள்ளதால் இங்கு மக்கள் கண்டிப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
ஹாட் ஸ்பாட் இடங்களில் எதெல்லாம் அனுமதி இல்லை?
ஹாட் ஸ்பாட் பகுதிக்குள் மக்கள் நுழையவோ அங்கிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட ஹாட் ஸ்பாட் பகுதிகளில் மக்கள் வெளியே செல்ல முடியாது. அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு டோர் டெலிவரி செய்ய அரசு ஏற்பாடு செய்யும். மீடியாவும் இது போன்ற பகுதிகளுக்கும் நுழைய முடியாது.
ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எதெல்லாம் அனுமதிக்கப்படும்?
அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பொருட்களை மக்கள் ஆர்டர் செய்து வீட்டு வாசலில் டெலிவரி மூலம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அரசு அனுமதியுடன் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் இயங்க அனுமதிக்கப்படும். அரசு இந்த பகுதியை மொத்தமாக சுத்தம் செய்யும்.
கண்டெயின்மென்ட் சோன் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் கொரோனா உள்ள நோயாளிகள் காணப்பட்டால் அதுதான் கண்டெயின்மென்ட் சோன். இந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும். ஸ்டேஜ் 2 பரவலை கண்டுபிடிக்கவும், வைரஸ் மேலும் பரவுவதை கண்காணிக்கவும் இந்த பகுதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா இருந்தால் கூட அந்த இடங்கள் கண்டெயின்மென்ட் சோன் என்று அழைக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள்:
சென்னை, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, நாமக்கல், மதுரை, தேனி, கரூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை,காஞ்சிபுரம், கன்னியாகுமரி , சிவகங்கை, வேலூர் , நீலகிரி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா ஏற்படவில்லை.
தமிழகத்தில் ஹாட் ஸ்பாட்:
தமிழகத்தில் 22 மாவட்டங்கள், அதாவது சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மண்டலங்களாக மத்திய அரசால் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகம் முடிவு:
இந்த நிலையில் தமிழகத்தில் மே 3-ம் தேதிவரை முழு ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எந்த தளர்வுகளும் கிடையாது என்று அரசு கூறியுள்ளது. இதனால் மேலே குறிப்பிடப்பட்டு இருந்த விதி தளர்வுகள் எதுவும் தமிழகத்திற்கு பொருந்தாது. மற்ற மாநிலங்களில் மட்டும் இந்த தளர்வு அமல்படுத்தப்படும். தமிழகத்தில் ஹாட் ஸ்பாட் மற்றும் ஹாட் ஸ்பாட் இல்லாத அனைத்து பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மற்ற மாநிலங்களின் நிலை:
தமிழகத்தில் இன்றுதான் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். அதே சமயம் மூன்று மாநிலங்களில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, பஞ்சாப், டெல்லியில் முழு ஊரடங்கு தொடரும். பஞ்சாப், டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும். தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு தொடரும். கர்நாடகாவை ஊரடங்கை தளர்த்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications