• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெயில் வெளுத்து வாங்கும் ஈரானில் எப்படி கொரோனா பரவியது என்று கேட்பவரா? கண்டிப்பா இதை படிங்க

|

சென்னை: ஆமா.. அதிகமா வெயிலு, வெப்பம் இருக்கிற நாடுகள்ல கொரோனா வைரஸ் வேகமாக பரவாது அப்படின்னு சொல்றாங்க.. ஆனா, பாலைவனப் பிரதேசம் ஈரான், சவுதி அரேபியா, இந்த மாதிரி நாடுகளிலும் கொரோனா பரவியிருக்கே, எப்படி..? என்ற கேள்வி பலருக்கும் வருவது சகஜமான ஒன்று.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். இதுவரை அதிகாரபூர்வமாக ஆய்வுகள் எதுவும் வெயில் அதிகம் உள்ள பிரதேசங்களில் கொரோனா வராது என்று நிரூபிக்கவில்லை. ஒரு சில ஆரம்ப கட்ட ஆய்வு முடிவுகள் அவ்வாறு வெளிவந்துள்ளன.

இருப்பினும் இது மிகப்பெரிய தொற்றுநோய் என்பதால், நாம் உரிய அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் வெளியே வராமல் இதை நம்புவது ரிஸ்க். அடுத்ததாக.. உண்மையிலேயே பலரும் நினைத்துக் கொள்வதை போல, ஈரான் அல்லது வளைகுடா நாடுகள் வெப்பத்தால் தகித்துக்கொண்டு இல்லை. இந்த சீசன் அப்படி. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பல நகரங்களை விடவும் அங்கே இதமான தட்பவெப்பம் தான் நிலவுகிறது.

கொரோனா.. மருத்துவமனையிலிருந்து எஸ்கேப் ஆகும் பலர்.. அடுத்தடுத்த சம்பவங்கள்.. பின்னணி காரணம்!

வுஹான் நிலவரம்

வுஹான் நிலவரம்

ஒருவேளை குளிர் அல்லது அதிக வெப்பம்இல்லாத கால சூழ்நிலையில் வைரஸ் எளிதாக பரவும் என்பது உண்மையாக இருந்தால், இந்த நாடுகளில் அவை பரவியதில் பெரிய ஆச்சரியம் இருக்க முடியாது. வாருங்கள்.. ஆதாரபூர்வமாக நாமே அதை பார்க்கலாம். இது சீனாவின் வூஹான் மாகாணத்தில் இன்றைய வெப்பநிலை. தற்போது அங்கு 21 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவி வருகிறது. இதுதான் கொரோனா வைரஸ் உருவான பகுதி என்று அறியப்படுகிறது. கிட்டத்தட்ட நமது ஊட்டி நகருக்கு இணையான குளிரான தட்பவெப்பம் தான் அங்கு நிலவி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஈரான் வெயில்

ஈரான் வெயில்

அடுத்த முக்கியமான கேள்வி ஈரான் நாட்டை பற்றியது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் தற்போதைய வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் மட்டும்தான். ஊட்டியை விடவும் அங்குதான் 5 டிகிரி செல்சியஸ் குறைவாக உள்ளது. அதிகமான குளிர் நிலவி வருகிறது. இன்றைய அதிகபட்ச வெப்ப நிலை அங்கு 19 டிகிரி வரை தான் செல்லப் போகிறது. இனிமேலும் ஈரான் மாதிரி வெயில் சுட்டெரிக்கும் இடங்களில் எப்படி வைரஸ் பரவியது என்ற கேள்வியை அதிகம்பேர் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

இத்தாலி

இத்தாலி

சீனாவுக்கு அடுத்தபடியாக மிக மோசமாக வைரஸ் தாக்குதலை சந்தித்துள்ள இத்தாலி பற்றி பார்க்கலாம். இத்தாலி நாட்டின் தலைநகரம் ரோம் வெறும் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத்தான் காட்டுகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை செல்லக் கூடும் என்று தெரிவிக்கிறது weather.com இணையதளம். எனவே இங்கும் ஊட்டிக்கு இணையான ஒரு தட்பவெப்பம்தான் நிலவுகிறது.

சவுதி நிலவரம்

சவுதி நிலவரம்

அடுத்ததாக சவுதிஅரேபியா. இங்கு தற்போது 22 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று கணிக்கிறது, வெதர் டாட் காம். ஓரளவுக்கு கோவை போன்ற தமிழக நகரங்களில் வெப்பநிலையை ஒட்டியதுதான். நாம் இதுவரை பார்த்த நகரங்களை விட சற்று வெப்ப நிலை அதிகம்தான் சவுதியில். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் சவுதியில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையும் இந்தியாவுக்கு கிட்டத்தட்ட ஈடாகத்தான் உள்ளது.

ஜப்பான் குளுகுளு

ஜப்பான் குளுகுளு

அடுத்ததாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு முக்கியமான நாடான ஜப்பான் நாட்டைப் பற்றி பார்க்கலாம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் வரை தான் இருக்கக்கூடும் என்கிறது இந்த வெப்சைட். அதாவது குளிர் பிரதேசம்தான். இங்கு, 829 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, கொரோனா 29 பேரை கொன்றுள்ளது.

பெங்களூர் நிலவரம்

பெங்களூர் நிலவரம்

அப்படியே நமது நாட்டுக்கு வந்தால், இன்று காலை நிலவரப்படி பெங்களூரில் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக இன்று 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்க கூடும். பெங்களூரை பொறுத்தளவில் ஐடி கம்பெனிகள் நிறைய இருப்பதால் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக வைரஸ் பரவி, அதுதான் 11 பேரை பாதித்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெப்பம் இதே மாதிரி அடித்து வெளுத்து நீடித்தால் பெங்களூரில் வைரஸ் பரவுவது குறையும் வாய்ப்பு உள்ளது.

சென்னை வெப்பநிலை

சென்னை வெப்பநிலை

அப்படியே தமிழகத் தலைநகர் சென்னைக்கு வருவோம். தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு மாநிலம் இது. சென்னையில் காலையிலேயே 29 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல.. அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கிறது weather.com. ஆனால் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரியைத்தான் ஒட்டியிருக்கும் என்பது ஒரு ஆறுதல் செய்தி. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் வைரஸ் பரவல் குறைவாகவும், வெப்பம் குறைவாக உள்ள பகுதிகளில் வைரஸ் அதிக வேகத்திலும், பரவிவருகிறது என்பது தெரிகிறது. ஆனால் ஈரானில் வெயிலுக்கு நடுவே எப்படி வைரஸ் பரவியது என்று கேட்பவர்களுக்கான, பதிவு தான் இதுவே தவிர, இதையே அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆய்வு முடிவுகள் தான் அதைச் சொல்ல வேண்டும்.

 
 
 
English summary
Why coronavirus is spreading in Iran amid high temperature and weather, this is what many asking, but this is not true. here is the weather report of all the corona affected areas.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X