ஆபத்து.. ஓமிக்ரான் பரவலே இன்னும் முடியவில்லை.. அதற்குள் இன்னும் பல வேரியண்ட்டா? WHO எச்சரிக்கை
சென்னை: உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரிப்பதால் மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்து இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் கடந்த இரண்டரை வருடங்களில் கண்ட கொரோனா வகைகளில் மிக வேகமான வகையான ஓமிக்ரான் உருவெடுத்துள்ளது. ஆம் இது பெரிய அளவில் மரணங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் எதிர்பார்க்காத வேகத்தில் பரவிக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் தினசரி கேஸ்கள் திடீரென 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 10 லட்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் உலகம் முழுக்க ஒரே நாளில் 30 லட்சம் கேஸ்கள் வரை நேற்று பதிவாகி உள்ளது.

உலக சுகாதார மையம்
இந்த நிலையில்தான் ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஓமிக்ரான் கேஸ்கள் உலகம் முழுக்க வேகமாக பரவுகிறது. இதனால் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஓமிக்ரான் அதிகம் பரவ பரவ இது அதிகம் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். ஒருவர் உடலில் இருந்து இன்னொருவர் உடலுக்கு செல்லும் போது அது பிரதி எடுத்துக்கொண்டே இருக்கும். ஒரே மாதிரிதான் எப்போதும் பிரதி எடுக்கும் என்று சொல்ல முடியாது.

ஓமிக்ரான் கேஸ்கள்
பிரதி எடுக்கும் திறனில் மாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. இது புதிய வகை கொரோனா வைரஸ்களை உருவாக்கும். அதாவது ஓமிக்ரான் அதிக அளவில் பரவினால் அதுவே உருமாற்றம் அடையும். இது உலகம் முழுக்க பல புதிய வகை கொரோனா உருவாக காரணமாக அமைந்து விடும். இப்போது காட்டுத்தீ போல ஓமிக்ரான் பரவிக்கொண்டு வருகிறது.

WHO எச்சரிக்கை
இது பல புதிய வகை கொரோனா கேஸ்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கும். இப்போது டெல்டாவை விட ஓமிக்ரான் கொஞ்சம் வலிமை குறைவாக உள்ளது. அதேபோல் மரணங்களும் குறைவாக இருக்கிறது. ஆனாலும் ஓமிக்ரான் அவ்வளவு வேகமாக பரவவில்லை. ஆனால் ஒருவேளை இனி உருவாகும் புதிய வகை கொரோனா இதை விட ஆபத்து கொண்டதாக இருக்கலாம். இதை விட அதிக தீவிரம் கொண்டதாக இருக்கலாம்.

கொரோனா வைரஸ்
அடுத்த வகை கொரோனா என்ன செய்யும் என்று நமக்கு என்ன தெரியும். அமெரிக்காவில் ஒரே நாளில் 1 மில்லியன் கேஸ்கள் பதிவாகி உள்ளது. நாம் மிகவும் ஆபத்தான இடத்தில் இருக்கிறோம். கொரோனா கேஸ்கள் திடீரென பல கண்டங்களில் உச்சம் அடைந்துள்ளது. முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பாவில் மிக மோசமாக கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. உண்மையான பாதிப்பு வரும் நாட்களில் தெரியும்.
Recommended Video

ஓமிக்ரான் உலக சுகாதார மையம்
இப்போது லேசான கேஸ்கள் வரலாம். ஆனால் போக போக இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அது கொஞ்சம் சீரியஸ் கேஸ்களாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் மருத்துவமனைகள் நிரம்பும். ஒருவேளை மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் போனால் அதனால் மரணங்களும் அதிகரிக்கும். டெல்டா தொடக்கத்தில் இப்படி இருந்துதான் பின்னர் மிக வலிமையான வேரியண்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications