சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிப்ரவரி மாசமே ஏன் தடை போடல.. வெளிநாட்டிலிருந்து வர ஏன் அனுமதி தந்தீங்க.. விளாசும் சு.சாமி

மத்திய அரசுக்கு சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி மாசமே வெளிநாட்டுல இருந்து வர்றவங்களுக்கு தடை விதிச்சிருக்கலாமே.. அப்படியே வந்தவங்களையும் 14 நாட்கள் ஏர்போர்ட்டிலேயே தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காதே.. குழப்பமும் ஏற்பட்டிருக்காதே.. மத்திய அரசு ஏன் அந்த நடவடிக்கையை முன்னரே எடுக்கவில்லை" என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக சுப்பிரமணிய சாமி கேள்வி கேட்டுள்ளார்!

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    பாஜக மூத்த தலைவர் சு.சாமிக்கிட்ட இருந்து எந்த ட்வீட் வந்தாலும், முதலில் அடிவயிற்றில் அள்ளு கிளம்புவது பாஜகவுக்குதான். காரணம் எப்பவுமே சேம் சைட் கோல் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து பாஜகவில் நீடித்தும் வருகிறார்.

     coronavirus: subramaniya swamy slams modi gov on corona issue

    இதற்கு காரணம், காங்கிரஸ் தலைவர்கள் பலரை கேஸ் போட்டு சிக்கலில் மாட்டி வைத்தவர், மாட்டி வைத்தும் வருபவர்.. இது பாஜக தலைமைக்கு பெரிய பிளஸ்ஸாக இருப்பதால்தான் சாமியை கண்டு கொள்ளாமல் உள்ளது பாஜக.

    சொந்த கட்சிக்கே அடிக்கடி சூன்யம் வைக்கும், சுப்பிரமணியசாமி இப்போது சரியான ஒரு கேள்வி எழுப்பி அதன் மூலம் மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.. டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கூடியுள்ளதாக சர்ச்சையாகி வருகிறது... இதை வைத்து மத ரீதியான விவகாரமும் வெடித்து திசை திருப்பப்பட்டு வருகிறது.

    வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை கூடிவருவதையொட்டி சு.சாமி தன்னுடைய ட்வீட்டில் "வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு பிப்ரவரி மாதமே ((ஃபிப்ரவரி 1-ம் தேதி வாக்கில்) தடை விதித்திருந்தால் தப்லீக் மாநாடு தொடர்பாக எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது.. வெளிநாட்டவர்கள் முன்கூட்டியே வர தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இந்தியர்களை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தியிருந்தால் இந்த குழப்பமே எழுந்திருக்காது. இந்த தடை ஏன் தாமதமானது?" என்று கேட்டுள்ளார்.

    சீனாவில் தொற்று இருப்பதும், அது உலக நாடுகளுக்கு பரவி கொண்டிருப்பதும் தெரிந்தும், பிப்ரவரி மாதமே தனிமைப்படுத்தும் அறிவிப்பை மத்திய அரசு ஏன் மேற்கொள்ளவில்லை என்ற இதே கேள்வியைதான் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை பார்த்து கேட்டு வருகின்றன.. அதே கேள்வியை பாஜக மூத்த தலைவர் சு.சாமியும் எழுப்பி மத்திய அரசு மீது குறை கூறியிருப்பது சலசலப்பை தந்து வருகிறது.

    English summary
    coronavirus: subramaniya swamy slams modi gov on corona issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X