கட்டுக்கடங்காத வேகம்.. இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா கேஸ்கள் அதிகம் வந்து கொண்டு இருக்கிறது.
முக்கியமாக கடந்த நான்கு நாட்களில் மொத்தம் 3 நாட்கள் 800க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையிலும் தினமும் 600+ கேஸ்கள் பதிவாகி வருகிறது.

தமிழகம் நிலை
தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20246 ஆக உள்ளது. தமிழகத்தின் கிராப் வேகமாக முன்னேறி வருகிறது.

சென்னை நிலை
சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 11362 பேர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு மோசமடைந்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு காரணமாக ஸ்டேஜ் 3 பரவல் ஏற்பட்டது. தற்போது கோயம்பேடு பாதிப்பு கொஞ்சம் குறைந்தும் கூட கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,313 ஆக அதிகரித்தது.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8776 ஆகவும். இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் தமிழகத்தில் 154 பேர் பலியாகி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications