தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா உறுதி - 5492 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5492 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5492 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிகை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,47,337 பேராக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,91,971 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,495 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8871 பேராக உயர்ந்துள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,555 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 924 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 926 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 9,97,620ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தினசரியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications