24,000 ரேபிட் கிட்களையும் சீனாவிற்கே திருப்பி அனுப்புகிறோம்.. நமக்கு இழப்பு இல்லை - விஜயபாஸ்கர்!
சென்னை: தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பரிசோதனை செய்ய பயன்படும் ரேபிட் கிட் சோதனைகான கொள்முதல் பெரிய சர்ச்சையில் முடிந்துள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அனைத்தையும் திருப்பி அளிக்கும்படி அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ICMR கடிதம் எழுதியுள்ளது. RT-PCR கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அனைத்து கொள்முதல் ஆர்டர்களும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேபிட் கிட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை. ரேபிட் கிட்டிற்கு இதுவரை பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை.

மிகவும் மலிவான விலை
எதிர்க்கட்சிகள் இதனை மலிவான அரசியலாக்க முயற்சி செய்கின்றன. கருவிகள் திருப்பு அனுப்பப்படுவதால் தமிழக அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படாது. ரேபிட் கிட்களை, ஆந்திர அரசு 730 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. அதேபோல் கேரள அரசு 699 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு 600 ரூபாய்க்குத்தான் வாங்கியது.

மிகவும் குறைவான விலை
மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிக குறைவான விலையில்தான் தமிழகம் வாங்கியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்த அதே நிறுவனம் மற்றும் டீலரிடம்தான் ரேபிட் கிட் வாங்கப்பட்டுள்ளது. wond fo என்ற நிறுவனத்திடம் இருந்து shan bio tech என்ற டீலர் மூலம்தான் கிட்கள் வாங்கப்பட்டது. இரண்டும் மத்திய அரசு அளித்த நிறுவனங்கள் ஆகும். மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது.

மிக பொய்யான குற்றச்சாட்டு
மத்திய அரசு சொல்லாத எந்த நிறுவனத்திடமும் நாங்கள் கிட்களை வாங்கவில்லை. இந்த உண்மை திமுகவிற்கு தெரியவில்லை. மத்திய அரசு அனுமதிக்காத நிறுவனத்திடம் நாங்கள் வாங்கியதாக திமுக பொய் ;பிரச்சாரம் செய்கிறது. உண்மையை அறியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர கோலத்தில் அறிக்கைகளை அள்ளி தெளிக்கிறார். இது திமுக தலைவர் ஸ்டாலினின் பொய்யான பிரச்சாரத்தின் வெளிப்பாடு ஆகும்., என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications